மேலும் அறிய
Advertisement
Thiruvarur: கள்ளச்சாராயம் விற்பனை - திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் கைது
சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வெளி மாநில சாராயம், சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 44 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து 12 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத சாராய விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள், வெளி மாநில சாராயம், வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் வீரமணி (35), சிவக்குமார் (38) ஆகிய இருவரும் வயலில் ஊறல் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.
தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் வலங்கைமான் வரதராஜன், பெரும்படுகை சிங்காரவேல், வடபாதிமங்கலம் முருகானந்தம், நன்னிலம் ஜெயபரணி, சேது பாண்டியன் உட்பட மாவட்ட முழுவதும் 44 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மாவட்ட முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion