மேலும் அறிய

Crime: மின் இணைப்பு வழங்க ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் - மின்வாரிய போர்மேன் கைது

திருவண்ணாமலையில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகரை சேர்ந்தவர் வரதன் (வயது 47), இவர் சென்னையில் தனியார் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். வரதன் அவருடைய மனைவி சுதா பெயரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலதிக்கான் பகுதியில் உள்ள அருணாச்சலம் நகரில் ஒரு வீட்டுமனை வாங்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து வீடு கட்டுவதற்காக தற்காலிகமாக மின்இணைப்பு கேட்டு கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி இ-சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்துள்ளார். அதற்கு உண்டான கட்டணத் தொகையாக ரூபாய் 586-ஐ ஆன்லைனில் மூலமாக செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வீடு கட்டும் பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிகமாக மின்சார மீட்டர் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வரும் ரேணு என்பவர் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

Crime: மின் இணைப்பு வழங்க ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் -  மின்வாரிய போர்மேன் கைது

அந்த சமயத்தில் வரதன், நானே ஓட்டலில் சப்ளையராக பணிபுரிகிறேன் என்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார். அதற்கு அவர் ஓட்டலில் வேலை செய்கிற நீ எதற்கு வீடு கட்டுகிறாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும், மீண்டும் வரதனை ரேணு தொடர்பு கொண்டு லஞ்சமாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 19-ந் தேதி வரதனை தொடர்பு கொண்ட அவர் லஞ்சமாக ரூபாய் 5 ஆயிரம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. லஞ்சப்பணம் கொடுக்க விருப்பம் இல்லாமல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் வரதன் புகார் மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரின்  அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற வரதன் அங்கு இருந்த போர்மேன் ரேணுவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

Crime: மின் இணைப்பு வழங்க ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் -  மின்வாரிய போர்மேன் கைது

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணைகாவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் லஞ்சம் வாங்கிய ரேணுவை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் மைதிலி தலைமையிலான காவல்துறையினர் செல்வராஜ், கோபிநாத், முருகன், சரவணன், கமலகண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரேணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம்.வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget