திருவிழா மோதல்... புரோட்டா மாஸ்டர் வெட்டி படுகொலை ; 6 பேர் கும்பல் வெறிச் செயல்!
செங்கம் அருகே முன்விரோதம் காரணமாக பரோட்டா மாஸ்டர் வெட்டி 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் 4 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் வீரானத்தல் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது (28) இவர் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பரோட்டா மாஸ்டர் வெங்கடேசன் நேற்று இரவு அப்பகுதியில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு சென்று பார்த்து விட்டு நள்ளிரவு நேரத்த்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீரனந்தல் செல்லும் கூட்ரோட்டில் 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா மாஸ்டர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் காலையில் அவ்வழியாக சென்ற நபர்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த வெங்கடேசனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்குள்ள நபர்கள் உடனடியாக செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உயிரிழந்து கிடந்த வெங்கடேசனை வெட்டியது யார் என்று விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் (27) மற்றும் கொலையான வெங்கடேஷ் ஆகியோர் தங்கள் கிராமத்தில் நடைபெறும் திருவிழாவுக்கு சென்றுள்ளனர்.
திருச்சியில் மது போதையில் பேருந்தை மறித்து ரகளை - தடுக்க சென்ற எஸ்.ஐக்கு கத்திக்குத்து...!
அப்போது அங்கு இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன் மதுசூதனனின் கையினை வெட்டி துண்டித்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக தற்போது வெங்கடேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. கொலை சம்பந்தமாக புதுப்பாளையம் ஜி.என். பாளையம் பகுதியைச் சேர்ந்த மதி, சுரேஷ், மற்றும் ஏழுமலை, வல்லரசு ஆகிய நான்கு பேரை புதுப்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வசந்த் வினோத் ஆகிய இரண்டு நபர்கள் தலைமறைவாகி உள்ளனர் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்ப்ளே உள்ளே..கோஹ்லி வெளியே..கங்குலியின் PLAN! ViratKohli | Indian Team Coach | Anil Kumble | BCCI
இந்த கொலை சம்பவம் குறித்து புதுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த புரோட்டா மாஸ்டர் வெங்கடேசன் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிக்பாஸ் சீசனில் கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Big boss season 5 | Vijay Tv | Kamalhaasan