மேலும் அறிய

கர்ப்பமானதால் விஷம் குடித்த 11ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு - தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் கைது

’’விடுதி காப்பாளர் மற்றும் தலைமையாசிரியர் காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தால் மாணவிக்கு உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சிகிச்சைகள் அளித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தடுத்திருக்கலாம்’’

திருவண்ணாமலையை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 16 வயதுடைய சிறுமி, இவர் சென்னை கோவளம் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் சிறுமியை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டுள்ளார்.

கர்ப்பமானதால் விஷம் குடித்த 11ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு - தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் கைது

அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் அளித்த புகார் தொடர்பாக கர்ப்பமான சிறுமியை விசாரிக்க காவல்துறையினர் முயன்றபோது அவர் சுயநினைவின்றி இருந்தார். சில தினங்களுக்கு பிறகு அவரது உடல்நலம் சற்று முன்னேற்றம் அடைந்த நிலையிலும் மாணவியால் பேச முடியவில்லை. இந்த நிலையில் தனது கர்ப்பத்திற்கு காரணம் ஹரிபிரசாத் என எழுதி காட்டி உள்ளார். 

கர்ப்பமானதால் விஷம் குடித்த 11ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு - தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் கைது

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹாரிபிரசாத் (31) மாணவியின் வீட்டருகே வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவி வீட்டுக்கு வரும்போது   டிரைவர் ஹாரிபிரசாத்துடன் பழகிய நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் ஹரிபிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர். 

கர்ப்பமானதால் விஷம் குடித்த 11ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு - தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் கைது
தலைமை ஆசிரியர் குமரகுருபன் மற்றும் விடுதிக்காப்பாளர் செண்பகவள்ளி

மேலும் சிறுமியின் 6 மாத கர்ப்பம் தொடர்பாக சென்னை உண்டு உறைவிட பள்ளியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளியின் விடுதி காப்பாளர் செண்பகவள்ளி (35) மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் வயது (51) ஆகியோருக்கு ஏற்கனவே தெரிந்தும் பெற்றோரிடம் அதனை கூறாமல் மறைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கோ அல்லது குழந்தைகள் ஆணையத்துக்கோ தெரிவிக்கவில்லை. இதனால் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக  தலைமை ஆசிரியர் குமரகுருபரன் மற்றும் செண்பகவள்ளியை விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

கர்ப்பமானதால் விஷம் குடித்த 11ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு - தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் கைது

இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் பேசுகையில்:- மாணவிக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தகவல் தெரிந்ததும், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தால் மாணவிக்கு உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சிகிச்சைகள் அளித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தடுத்திருக்கலாம் என தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!

Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!

Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!

சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?

Embed widget