மேலும் அறிய

Crime: பணி முடிந்து வீடு திரும்பிய நபர்.. மர்ம கும்பல் செய்த வெறிச்செயல்.. நெல்லையில் பயங்கரம்..!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வயல் வெளியில் உயிரிழந்த நிலையில் கிடந்த மாயாண்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நெல்லை மேலப்பாளையம் அருகே மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு வயது 36, இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிலையத்தில் பணி செய்து வருகிறார். இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் நேற்று இரவு கடையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குறுக்குத்துறை  வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வயல்வெளியின் அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை மறித்து வெட்ட முயற்சித்துள்ளனர்.

இதனை தடுத்த அவர் அருகில் இருந்த வயல்வெளியில் தப்பி ஓடிய நிலையில் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அங்கேயே வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் வயல்வெளியில் அலறல் சத்தம் கேட்டு பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் ஒருவர் துடித்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.  உடனடியாக அவர்கள் நெல்லை சந்திப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வயல் வெளியில் உயிரிழந்த நிலையில் கிடந்த மாயாண்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் பரணி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.

இதனிடையே காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், மேல நத்தத்தில் உள்ள ஒரு வீட்டில் கிரைண்டர் திருடு போயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாயாண்டி ஒரு சிலரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த மாயாண்டியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. மேலும் கொலை நடத்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நெல்லை மாநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்ற சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget