மேலும் அறிய

குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

முகமூடி அணிந்திருந்த அந்த நபர், முதலில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை கவனித்துள்ளார். பின்னர் கேமரா தனது நடமாட்டத்தை பதிவு செய்யாத வகையில் அதனை திசைக்கு திருப்பினார்.

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் முகமூடி அணிந்து புகுந்த மர்ம நபர், சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கருவறைக்குள் நுழைந்து அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

சுவர் ஏறி கோவிலுக்குள் புகுந்த ஆசாமி

கருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். கோவிலின் பிரதான வாயில் வழியாக செல்லாமல், பின்புறம் உள்ள சுவர் வழியாக கோவில் வளாகத்திற்குள் புகுந்துள்ளார்.

முகமூடி அணிந்திருந்த அந்த நபர், முதலில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை கவனித்துள்ளார். பின்னர் கேமரா தனது நடமாட்டத்தை பதிவு செய்யாத வகையில் அதனை வேறு திசைக்கு திருப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி கோவில் பூட்டு மற்றும் கதவுகளை உடைத்துள்ளார். சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்ற அச்சமின்றி கருவறை பகுதியில் நுழைந்த மர்ம நபர், அங்கு அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகையை குறிவைத்துள்ளார்.

அம்மன் கழுத்தில் இருந்த நகை திருட்டு

கருவறைக்குள் சென்ற அந்த நபர், அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 4 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை கழற்றி எடுத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் பணத்தையும் திருடியதாக கூறப்படுகிறது.

திருட்டை முடித்த பின்னர் அந்த நபர் கோவிலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கடந்த மாதமும் இதே கோவிலில் கைவரிசை

இந்த சம்பவத்தைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இதே கோவிலில் கடந்த மாதம் 6-ம் தேதியும் திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அப்போது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், கருவறையில் இருந்த சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியையும், உண்டியலில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கோவிலில் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் திருட்டு நடைபெற்றிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.

போலீசார் தீவிர விசாரணை

இந்த நிலையில், தற்போதைய திருட்டு சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி காட்சிகளுடன் லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், முகமூடி அணிந்து வந்த மர்ம நபரின் உருவம், நடமாட்டம் மற்றும் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும், ஏற்கனவே இதே கோவிலில் நடைபெற்ற திருட்டு சம்பவத்துக்கும் தற்போதைய திருட்டுக்கும் தொடர்பு உள்ளதா? ஒரே நபர் மீண்டும் மீண்டும் கோவிலை குறிவைத்து கைவரிசை காட்டினாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கோவிலில் திருட்டு நடைபெற்று வருவதால், கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget