மேலும் அறிய

சேலம்: தலையில் வெட்டப்பட்ட அரிவாளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் - சேலத்தில் பரபரப்பு

ஹோட்டலில் வைத்திருந்த பாக்கியை திருப்பி தராததால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (26). இவர் தனது நண்பரான கட்டிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சவுந்தரராஜன் (22) ஆகியோருடன் நேற்று இரவு 9 மணிக்கு குண்டத்துமேடு டாஸ்மாக் கடையின் எதிரே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, முருகேசனின் நண்பர் சக்திவேல் (26) என்பவரும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். இந்த நிலையில் சக்திவேல் மற்றும் முருகேசனுக்கு இடையே ஏற்கனவே பணம் விஷயத்தில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பிறகு ஆத்திரம் அடைந்த சக்திவேல் மதுபோதையில் வீட்டிற்கு சென்று ஆடு அறுக்கும் அரிவாளை எடுத்துவந்து முருகேசனை வெட்டினார். அப்போது அதனை தடுக்க முயன்ற மணிகண்டனையும் வயிற்றில் குத்தினார். மேலும் சௌந்தரராஜனின் தலையிலும் வெட்டினார். இந்தச் சூழலில் முருகேசனும், மணிகண்டனும் எடப்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சவுந்தரராஜன் தலையில் அரிவாளால் வெட்டுப்பட்ட நிலையில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சவுந்தரராஜனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தலையிலிருந்து அரிவாளை எடுக்காத நிலையில் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரிவாளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம் அப்படி செய்யும்போது உயிரிழக்கும் அபாயமும் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இதுகுறித்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சேலம்: தலையில் வெட்டப்பட்ட அரிவாளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் - சேலத்தில் பரபரப்பு

விசாரணையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவடத்தூர் கிராமம் குண்டத்துமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல். இவர் ஹோட்டல் நடத்திவருகிறார். சக்திவேலின் கடையில் முருகேசன் ரூ. 2 ஆயிரத்து 500 பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இச்சமயத்தில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஒன்றாக மது அருந்தியபோது இந்த விபரீதம் நடந்ததாக தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட சௌந்தரராஜனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget