மேலும் அறிய

’புகார் தர வந்த பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த ஏட்டு’- வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்...!

’’தலைமை காவலர் சண்முகம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவுகள் 354-A, 509 பிரிவுகளின் கீழ் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது’’

புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடனும், இரண்டு குழந்தைகளுடனும் வசித்துவருகிறார் அந்த இளம் பெண். கணவர் தாழ்வு மனப்பான்மை காரணமாகத் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கணவன் அடிப்பதால் வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும் படியும் கூறியுள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் ஒருவருடன் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற அந்த பெண்ணின் கணவரை தனியாக அழைத்துப் பேசிய அதிகாரிகள், அவரை எச்சரிக்காமல், அந்தப் பெண் கொடுத்த புகாரை வாங்காமல், உன் கணவர் ரொம்ப நல்லவர். அவருடன்தான் நீ வாழ வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கின்றனர். அத்துடன் மேலும் தேவை என்றால் குடும்ப நல நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர்.

’புகார் தர வந்த பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த ஏட்டு’- வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்...!

நியாயம் கிடைக்கும் என்று சென்ற இடத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் வீட்டுக்கு திரும்பினார் அந்த பெண். அதன் பிறகு வழக்கமான அடி உதைகளுடன், சைக்கோத்தனமான செயல்களையும் அரங்கேற்றியிருக்கிறார் அந்த கணவர். இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி காலையில் தன்னை மிருகத்தனமாக தாக்கியதால் வலியுடன் காவல்துறை அவசர உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு அழுதிருக்கிறார் அந்தப் பெண். அதையடுத்து லாஸ்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

 

அனைவரும் சென்றுவிட்ட பிறகு அந்தப் பெண் குறித்த அனைத்துத் தகவல்களையும் கேட்ட அந்த காவலர், `உன்னைப் பார்த்தால் ரெண்டு புள்ளைக்கு அம்மா மாதிரி தெரியலையே நீ சிகப்பா இவ்ளோ அழகா இருக்கே. ஆனா உன் வீட்டுக்காரன் கருவாடு மாதிரி இருக்கான். அவன் கூட வாழ்ந்து நீ ஏன் கஷ்டப்படணும்? உனக்கு நான் வேலை வாங்கி தருகிறேன். உன்னையும் உன் குழந்தைகளையும் நான் பார்த்துக்கறேன். நம்மகிட்ட நிறைய வக்கீல் இருக்காங்க. உனக்கு நானே டைவர்ஸ் வாங்கித் தர்றேன். இனிமே நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்  என்று கூறி திடீரென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்திருக்கிறார். அவர் கையை இழுத்துக்கொள்ள, உனக்கு ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு, அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று அந்தப் பெண் கூற, அதற்கென்ன நான் கற்றுக்கொடுக்கிறேன்’ என்று கூலாகக் கூறிவிட்டு, எந்த உதவியாக இருந்தாலும் தனக்குப் போன் செய்யும் படி தனது இரண்டு எண்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதற்கு மறுநாள் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீட்டிலிருந்த கதவை உடைத்து 13 பவுன் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார் அந்த கணவர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியபோதுதான், காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறி அழுதிருக்கிறார். அதையடுத்து அந்த பெண்ணை இறைவி பெண்கள் பாதுகாப்பு என்ற அமைப்பிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தக் காவலரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அந்த அமைப்பினர், அந்த காவலருக்கு போன் செய்யும்படி கூறி அந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.


புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

அந்த உரையாடலின் போது விவகாரத்துக்காக வழக்கறிஞருக்கு கொடுக்கத் தன்னிடம் பணம் இல்லையென்று கூறுகிறார் அந்தப் பெண். அதற்கு, அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். அப்புறமா வாங்கிக்கச் சொல்றேன். இன்னைக்கு சாயந்தரம் பஸ் ஸ்டாண்டுகிட்ட இருக்கற அந்த வக்கீல் ஆபீஸுக்கு வா என்கிறார். தொடர்ந்து சார், அந்த ஆயில் மசாஜ் சொன்னீங்களே... அது எங்க சார்? என்று அந்தப் பெண் கேட்க, அந்த வக்கீல் ஆபீஸுக்கு வந்துடு என்கிறார். தொடர்ந்து எண்ணெய் நான் வாங்கி வரட்டுமா? என்று அந்தப் பெண் கேட்க, அதையெல்லாம் பார்த்துக்கலாம். சாயந்திரம் 5 மணிக்கு வந்துடு. நான் வெயிட் பண்றேன் என்று இணைப்பைத் துண்டிக்கிறார். மாலை 5 மணிக்கு பேருந்து நிலையத்தில் அந்த தலைமை காவலர் காத்திருக்க, இறைவி அமைப்பினருடன் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று தலைமைக் காவலர் மீது புகார் அளித்தார் அந்த இளம்பெண்.

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

இதனால் கோபமான காவலர் சண்முகம், அந்த பெண்ணிடம் புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் என்னை விபசார வழக்கில் கைது செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார். மேலும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஏட்டு சண்முகத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை ஆபாசமாகப் பேசியதுடன், என் நடத்தையை கேவலமாக விமர்சித்த தலைமை காவலர் சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் சண்முகம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவுகள் 354-A, 509 பிரிவுகளின் கீழ் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்ற புகாருடன் காவல் நிலையம் செல்லும் பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தரும் சேவையை புதுச்சேரி காவல்துறை எப்போது தொடங்கியது? என்று கேட்கும் லாஸ்பேட்டை பகுதி மக்கள், காவல் நிலையங்கள் அனைத்தும் முழுமையான சிசிடிவி கண்காணிப்புக்குள் வந்தால் மட்டுமே இப்படியான தவறுகளை தடுக்க முடியும் என்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget