தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்: போக்சோ சட்டத்தில் கைது!
ஓசூர் அருகே சித்தி மகளான தங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது அண்ணனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியை சேர்ந்த விஜய் வயது (23) இவர் பளுதூக்கும் இயந்தரத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரின் தாய் சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடிரென சில மாதம் முன்பு உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் விஜய் இருந்ததால் , அவருடைய சித்தி, அக்கா மகன் என்பதால் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து விஜய் சில நாட்களாக சித்திவீட்டில் தங்கி இருந்தார். வேலைக்கு சித்தி வீட்டில் இருந்து சென்றுவந்த நிலையில் , வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது சித்தி மகளான ஒன்பதாவது படிக்கும், 15 வயதுடைய சிறுமியை ஏமாற்றி நாம் வெளியே சென்று வரலாம் என்று கூறி விஜய் இருசக்கர வாகனத்தில் ஆசை வார்த்தைகளை கூறி அழைத்து சென்ற விஜய் சிறிது தூரம் சென்றதும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிறுமியை கீழே இறங்கி விட்டு சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமை ஈடுபடுவதற்கு அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து நீ எனக்கு அண்ணன் என்று கூறி மறுப்பு தெரிவித்து அங்கு இருந்த தப்பிக்க நினைத்துள்ளார். அதனையறிந்த விஜய், சிறுமியை வலுகட்டாயமாக இழந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சிறுமியிடம் இங்கு நடந்த சம்பவத்தை நீ வெளியில் தெரிவித்தாலோ அல்லது உன்னுடைய வீட்டில் கூறினால் உன்னை கொலைசெய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியை வீட்டில் அழைத்து வந்து விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு சிறுமி வீட்டில் சோர்வாக இருந்துள்ளார் இதனைக்கண்ட சிறுமியின் தாய் கேட்டுள்ளார். அப்போது சிறுமி கதறி அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை சிறுமி கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நடந்த சம்பத்தை கூறி பரிசோதனை செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் ஓசூர் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் , புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , சிறுமியிடம் அத்துமீறிய விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்