தம்பியை குடும்பத்தோடு சேர்ந்து அடித்துக் கொன்ற அண்ணன்!
மரக்காணம் அருகே நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் : மரக்காணம் அருகே நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 32), இவரது அண்ணன் சீனிவாசன் (வயது 42), இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் சிவக்கொழுந்து மற்றும் இவரது அண்ணன் சீனிவாசன் ஆகியோர் சண்டை போட்டுள்ளனர்.
பதிவாளர் உதவியுடன் நிலத்தை அபகரிக்க முயற்சி: அலுவலகத்தை முற்றுகையிட்ட உரிமையாளர்!
வாய்த்தகராறில் தொடங்கிய இந்த சண்டை சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் சீனிவாசனின் அவரது மனைவி வாசுகி மற்றும் அவரது மைத்துனர் சதாசிவம் ஆகியோர் சிவக்கொழுந்துவை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவக்கொழுந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார், அப்பொழுது சீனிவாசன் அவரது மனைவி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோர் மூன்று பேரும் சிவக்கொழுந்து தலையில் கட்டையால் தாக்கியுள்ளனர்.
[tw]
#ChennaiRain | சென்னை மழை பாதிப்பு தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் https://t.co/wupaoCQKa2 | #Chennai | #ChennaiCorporation | #TNRains | #TNGovt pic.twitter.com/cu24pa35X5
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
இதனால் சிவக்கொழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது. இதைப்பார்த்த கிளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்கொழுந்துவை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிவக்கொழுந்துவை பரிசோதனை செய்த மருத்துவர், சிவக்கொழுந்து இறந்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து சிவக்கொழுந்துவின் மனைவியை அளித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்கொழுந்தை கொலை செய்த சீனிவாசன் அவரது மனைவி வாசுகி மற்றும் மைத்துனர் சதாசிவம் ஆகிய மூவரையும் மரக்காணம் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சிவக்கொழுந்து விற்கு கங்கம்மாள் என்ற மனைவி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர். நிலத்தகராறு காரணமாக தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்