மேலும் அறிய

'கர்ப்பத்தை கலைத்து விடு' பட்டதாரி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி மோசடி - ஜிம் உரிமையாளர் கைது

கடந்த 2024ம் ஆண்டு மார்ச்.15ம் தேதி, ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மகுமரன் (27) பட்டதாரி பெண்ணிடம், திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி பழகியுள்ளார்.

தஞ்சாவூர்: பட்டதாரி இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம், நகையை மோசடி செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள ஒரு ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு இந்த இளம்பெண் சேர்ந்துள்ளார். 

கடந்த 2024ம் ஆண்டு மார்ச்.15ம் தேதி, ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மகுமரன்,27,. பட்டதாரி பெண்ணிடம், திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி பழகியுள்ளார். மேலும், புதியதாக ஒரு ஜிம் திறக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என அந்த இளம்பெண்ணிடம், பத்மகுமரன் கேட்டுள்ளார். இதை நம்பி அந்தப் பெண்ணும், தனது நகைகளை அடகு வைத்து, 38 லட்சம் ரூபாயை, பத்மகுமரனின் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளனர். இந்த பணத்தை கொண்டு, பத்மகுமரன் செட்டிமண்டபம் பகுதியில் புதிய ஜிம் ஒன்றை திறந்தார். 

கடந்த, அக்டோபர் மாதம், மகாமக குளம் ஜிம்மில் இருந்த பத்மகுமரனிடம், இளம் பெண் திருமணம் தொடர்பாக கேட்ட போது, தனது தாயிடம் கேட்டு, உன்னை தான் திருமணம செய்துக்கொள்ளுவேன் என கூறி, அந்த இளம் பெண்ணிடம், பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதால், இளம் பெண் கர்ப்பமானார். 

இதன்பிறகு, அந்த பெண்ணிடம், பத்மகுமரன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், பத்மகுமரனை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண் முற்றிலுமாக தவிர்த்துள்ளார். இதையடுத்து பத்மகுமரனின் தாய் புனிதாதேவியை நேரில் சந்தித்து நடந்த விபரங்களை அந்த இளம் பெண் கூறியுள்ளார். அப்போது, புனிதாதேவி, என் மகன் உன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவான். நீ கர்ப்பத்தை கலைத்து விடு என மிரட்டியுள்ளார்.  

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில், புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு, பத்மகுமரன், இளம் பெண்ணிடம் வாங்கிய 38 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்வதாகவும் உறுதி தெரிவித்துள்ளார். இதனால் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரை அந்த இளம்பெண் வழக்கை வாபஸ் பெற்றார். 

இந்நிலையில் கடந்த பிப்.23ம் தேதி, சுவாமிமலை முருகன் கோயிலுக்கு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுவதாக கூறி பத்மகுமரன் வரவழைத்தார். அங்கு சென்ற அந்த இளம்பெண்ணிடம், கர்ப்பத்தை கலைத்து விட்டு இல்லையென்றால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.  

இதனால் மனமுடைந்த இளம்பெண் துாக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதையறிந்த அவரது தந்தை இளம் பெண்ணை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, இளம் பெண் பத்மகுரன், அவரது தாய் புனிதா தேவி மீது புகார் அளித்தார். 

புகாரின் பேரில், நேற்றுமுன்தினம் பத்குமரனை திருவிடைமருதுார் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget