மேலும் அறிய

அவள் எனக்கா? உனக்கா? ... திசை மாறிய காதலால் திட்டம் போட்டு சிறுவனை தீர்த்துக்கட்டிய நண்பன் கைது

தமிழசரனின் காதலை துண்டித்த அந்த பெண் அதன்பிறகு தாமோரனிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது தமிழரசனுக்கு தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஒரே பெண்ணை காதலித்த பிரச்னையில் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வயலில் கிடந்த ஆண் பிணம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அருகே மேலாத்துக்குறிச்சி கொள்ளிடம் ஆற்றின்கரை அருகே மயானக்கரை சாலை பகுதியில் வயல்கள் உள்ளது. இதில் ஒரு வயலை அந்த பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயலுக்கு சென்ற ரமேஷ் உடல் மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சிறுவன் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. தொடர்ந்து இதுகுறித்து நீலத்தநல்லூர் கிராமநிர்வாக அலுவலர் இளவரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமநிர்வாக அலுவலர் இளவரசன் சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொ) சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் மற்றும் கும்பகோணம் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தஞ்சையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் வயல்பகுதியில் கிடந்த ரத்தக்கறை படிந்த மதுப்பாட்டில்கள், தண்ணீர்பாட்டில்கள், மேலும் வயல்களில் கிடந்த ரத்திமாதிரிகளையும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.


அவள் எனக்கா? உனக்கா? ... திசை மாறிய காதலால் திட்டம் போட்டு சிறுவனை தீர்த்துக்கட்டிய நண்பன் கைது

பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை

தொடர்ந்து போலீசார் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் உந்து நிலையத்தில் வேலைபார்க்கும் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியில் தங்கி வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடந்திருப்பது அரியலூர் மாவட்டத்திற்கு அருகில் என்பதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணம் பிரச்சினையா அல்லது வேறு ஏதும் காரணமாக கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர் கும்பகோணத்தை அடுத்த மூப்பகோவில் பகுதியை சேர்ந்த தாமோதரன் (15) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தாமோரனின் நண்பர்கள் மற்றும் சிலர் மீது போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியது.

திசை மாறிய காதலால் ஏற்பட்ட மோதல்

அதில் தாமோதரனின் நண்பனான கும்பகோணம் ஏரகரம் வழிநடப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பூச்சி (எ) தமிழரசன் (22) என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடன்தலைமறைவாக இருந்த தமிழரசனை பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தமிழரசனும், தாமோதரனும் ஒரே இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் 2 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தமிழரசன் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழரசனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், அந்த பெண் தமிழரசனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். காதலையும் துண்டித்துள்ளார்.

பிரேக் அப் ஆன காதலும், நண்பர் பக்கம் சாய்ந்த காதலியும்

தமிழசரனின் காதலை துண்டித்த அந்த பெண் அதன்பிறகு தாமோரனிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது தமிழரசனுக்கு தெரியவந்துள்ளது. தனது முன்னால் காதலி தனது நண்பனுடன் பேசுவதை அறிந்த தமிழரசன் தாமோதரனை அழைத்து எச்சரித்துள்ளார். இதனால் தமிழரசன் மற்றும் தாமோதரன் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் ஒரே கடையில் வேலைபார்ப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி போட்டு திட்டம் தீட்டிய தமிழரசன்

இதுகுறித்து தமிழரசன் தனது நண்பர்களான ஏரகரம் பகுதியை சேர்ந்த 18 சிறுவன், சத்யா காலனி பகுதியை சேர்ந்த கருப்பையன் மகன் பரத் (19) ஆகியோரிடம் கூறியுள்ளார். மேலும் தாமோதரனை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 23- ந் தேதி இரவு காதல் விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று தாமோதரனிடம் தமிழரசன் கூறியுள்ளார். அதன்படி தமிழரசன் தனது நண்பர்களான பரத் மற்றும் 18 வயது சிறுவன் மற்றும் தாமோதரன் ஆகியோர் பைக்கில் மேலாத்துகுறிச்சி கொள்ளிடம் ஆற்றங்கரை குடிநீர் உந்து நிலையம் அருகே உள்ள வயல் பகுதிக்கு வந்துள்ளனர்.

அங்கு ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றியதில் தமிழரசன், பரத் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் தாமோதரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். சற்று நேரம் கழித்து தாமோதரன் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர் அவரது உடலை 3 பேரும் சேர்ந்து தூக்கிச் சென்று அருகில் இருந்த வயலில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தமிழரசன், பரத், 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில், கைது செய்யப்பட்ட தமிழரசன் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில்  உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்த குள்ளமணி (20) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget