மேலும் அறிய

Crime: உப்பு மூட்டைக்குள் ரேசன் அரிசி; லாரியில் கேரளாவிற்கு கடத்திய இருவர் கைது

தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் முழுமையாக சோதனை செய்த போது, கோவில்பட்டியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.

தமிழக-கேரளா எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வாகன சோதனை சாவடி வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்கும் காவல்துறையினர் அவ்வப்போது சோதனை சாவடியில் ரேசன் பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று இரவு ரேசன் அரிசி கடத்தல் நடைபெற இருப்பதாக புளியறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், புளியரை சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் புளியரை சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் முழுமையாக சோதனைக்கு உட்படுத்திய போது, கோவில்பட்டியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர்.

Crime: உப்பு மூட்டைக்குள் ரேசன் அரிசி; லாரியில் கேரளாவிற்கு கடத்திய இருவர் கைது

அப்போது, லாரி ஓட்டுநர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் இருப்பது என்னவென்று விசாரணை மேற்கொண்ட போது, தூத்துக்குடியில் விளைந்த உப்பு மூட்டைகளை கேரளா நோக்கி கொண்டு செல்வதாக லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் லாரியில் மூடப்பட்டிருந்த தார்பாயை அகற்றி உள்ளே இருந்த மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மேற்பகுதியில் உப்பு மூட்டைகளும், அடிப்பகுதியில் அரிசி மூட்டைகளும் இருந்ததுள்ளது.  அதனை தொடர்ந்து, லாரியில் இருந்த அரிசி முட்டைகளை சோதனை செய்த போது அது ரேஷன் அரிசி என்பது தெரிய வந்துள்ளது, அதில் 12 டன் ரேசன் அரிசி மூட்டைகளில் இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த பீர்க்கண்ணு மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரை கைது செய்து தொடர்விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புளியரை போலீசார் தகவல் கொடுத்துள்ள நிலையில், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? தொடர்ச்சியாக இது போன்று இவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனரா? எங்கிருந்து ரேசன் அரிசி கொண்டுவரப்பட்டது. இதனை யாரிடம் விற்பனை செய்ய உள்ளனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உப்புமூட்டைக்குள் ரேசன் அரிசியை பதுக்கி கேரளாவிற்கு கடத்தி செல்லவிருந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget