மேலும் அறிய

மூதாட்டி அடித்து கொலை.. 2 பெண்கள் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை - தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..!

மூதாட்டி கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது வீராணம் ராஜா தோட்டம். இப்பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு பேச்சியம்மாளின் சகோதரி கருத்தாத்தாள்(60) கேட்டு வந்துள்ளார்.

அடித்துக்கொலை:

அதற்கு பேச்சியம்மாள் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறிது நாள் கழித்து அதாவது கடந்த 24.08.2014 அன்று பேச்சியம்மாளின் கணவர் கருப்பசாமி மதுரைக்கு சென்றுள்ளார். இதனையறிந்த கருத்தாத்தாள் தனது கணவர் பிச்சையா, மகன் துரைமுத்து, மகள் மாரியம்மாள் ஆகியோருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று வீட்டை எழுதி தருமாறு பிரச்சினை செய்துள்ளனர். அப்போது பேச்சியம்மாள் மறுக்கவே அவரை 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். 

மறுநாள் வீட்டிற்கு வந்த கருப்பசாமி தனது மனைவி காயமடைந்த நிலையில் எழுந்து நடக்க முடியாமல் கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு என்ன நடந்தது என்று விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது. பின் பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை:

இது குறித்து கருப்பசாமி வீரகேரளம்புதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு விசாரணையானது தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்  நேற்று தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் இருக்கும் போதே  முன்னதாக பிச்சையா உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகிய மூன்று பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜராகினர். அப்போது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். கடந்த 9 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget