மேலும் அறிய

தஞ்சாவூர்: ஓடும் பஸ்சிலேயே மூதாட்டியிடம் 15 சவரன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்கள்

பஸ்சில் வந்த மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள் இருந்த கைப்பையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்த மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள் இருந்த கைப்பையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சிலேயே கைவரிசையை காட்டிய மர்மநபர்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி தேவாரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கௌசல்யா (62). கடந்த 14ம் தேதி தனது கணவருடன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு கௌசல்யா பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். இவர் தனது கைப்பையில் ஒரு பர்சில் 15 சவரன் தங்க நகையை வைத்திருந்தார். அப்போது வல்லம் மின்நகர் பகுதியில் இறங்குவதற்காக எழுந்தபோது தனது கைப்பையில் நகை வைத்திருந்த பர்ச்சை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.


தஞ்சாவூர்: ஓடும் பஸ்சிலேயே மூதாட்டியிடம் 15 சவரன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்கள்

இதுகுறித்து அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓடும் பஸ்சிலேயே மூதாட்டியிடம் இருந்து நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.




பைக்கை வேகமாக ஓட்டியதை கண்டித்ததால் கோஷ்டி தகராறு:

தஞ்சை அருகே பைக்கை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றதை கண்டித்தால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே ஜெபமாலை புதுத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புகழ்மணி (45). இதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). இவருக்கு 17 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயக்குமாரின் 14 வயது மகன் பைக்கில் வெகு வேகமாக ஜெபமாலைபுரம் பகுதியில் சென்றுள்ளார். இதை ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து தனது தந்தை ஜெயக்குமாரிடம் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் அவரது இரு மகன்கள், அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமார் உட்பட 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரன் மற்றும் புகழ்மணியை கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகழ்மணி கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், 14 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் ஜெயக்குமாரின் மனைவி ஜூலியட் மேரி கொடுத்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன், அவரது மனைவி புகழ்மணி, அப்பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் பாரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த கோஷ்டி மோதல் தகராறு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget