மேலும் அறிய

Tambaram MLA : சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ.. மூன்று பிரிவுகளில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு..

ஒருமையில் பேசிய தாம்பரம் எம்எல்ஏ : சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வலம்வரும் வீடியோவால் பரபரப்பு

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் தாம்பரம் தொகுதி முதன்முதலில் தொடங்கப்பட்டபோது, இவர் திமுக தாம்பரம் மாநகர செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், எஸ்.ஆர்.ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
 
Tambaram MLA : சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ.. மூன்று பிரிவுகளில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு..
 
விசாரணை
 
சென்னையில் புறநகர் பகுதியாக இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில, மல்ராசாபுரம் ஆகிய பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே டேஜுங் மோபட்ட என்ற நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. என் நிலையில் இந்த நிறுவனத்தில் ஆர்கே ஷர்மா என்பவர் எம்டியாக பணியாற்றி வந்துள்ளார். ஆர்கே ஷர்மா இந்த நிறுவனத்தில் சில முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக புகாரின் அடிப்படையில் கடந்த, 06.08.22 அவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இதனை அடுத்து அங்கு செயல்பட்டு வரும் உரிமையாளர்கள் இருவருடன் இணைந்து, நிறுவனம் 10 வருடங்களுக்கு லீஸ் எடுத்துள்ளது. தற்பொழுது வாடகை இடத்தில் இந்த நிறுவனம் இயங்கி வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வைரல் வீடியோ
 
குறிப்பாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா உரிமையில் பேசி இந்த நிறுவனத்தை இழுத்து மூடி விடுவோம் என கூறுகிறார். மற்றொரு நபர் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும்பொழுது மிகவும் கடினமான தொனியில் ஒருமையில் பேசி தகாத வார்த்தையில் அந்த நபரை திட்டுகிறார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கப்படும் எனக் கூறியதும் கோபமடைந்த எஸ் ஆர் ராஜா மேலும் அவரை திட்டி அங்கிருந்து செல்ல முற்படுகிறார். அப்பொழுது எதிரி நம்பர் நான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டு போட்டவன் எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என பேசும் வீடியோக்கள் இன்று சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாக பரவியது.
 
Tambaram MLA : சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ.. மூன்று பிரிவுகளில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு..
இதுகுறித்து நிறுவனத்தின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ”எங்கள் நிறுவனத்தில் முன்னாள் எம்.டி( MD) ஆர்.கே. சர்மா ஊழல் புகார் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் சுமார் 230 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா தொலைபேசி வாயிலாக எங்களுக்கு மிரட்டல் கொடுத்தார். இந்நிலையில் இன்று திடீரென நிறுவனத்துக்குள் நுழைந்து எங்களை மிரட்டி உள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலர் அன்பு அவர்களிடம் இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.
 
விளக்கம்
 
இது குறித்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், ”நண்பர் தனது இடத்தில் பிரச்சனை உள்ளதாக அழைத்துச் சென்றார். உரிமையாளராக இருக்கும் என் நண்பருக்கு அங்கு வாடகைக்கு இருக்கும் நபர்கள் வழி விடுவதில்லை, எனவே அதுகுறித்து விசாரிப்பதற்காகவே நான் அங்கு சென்றேன்” என தெரிவித்துள்ளார்.
 
வழக்கு பதிவு
 
நிறுவனத்தின் CEO கொடுத்த புகார் மீது தாம்பரம் மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட, மறைமலை காவல் நிலையத்தில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மீது  294 b, 447, 506(Il) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  ஸ்மார்ட்டான விஜய் சேதுபதி.. கொண்டாட்டமாக தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8
Biggboss Tamil Season 8 LIVE: ஸ்மார்ட்டான விஜய் சேதுபதி.. கொண்டாட்டமாக தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  ஸ்மார்ட்டான விஜய் சேதுபதி.. கொண்டாட்டமாக தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8
Biggboss Tamil Season 8 LIVE: ஸ்மார்ட்டான விஜய் சேதுபதி.. கொண்டாட்டமாக தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget