சந்தேகத்தால் 11 ஆண்டு திருமண வாழ்க்கை! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து.. கணவர் செய்த பகீர் சம்பவம்!
தாலி கட்டிய மனைவியின் நடத்தையில் ச்நதேகம் ஏற்பட்டதை அடுத்து நாற்காலியில் கட்டிவைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்பீர் சிங். இவரது மனைவி சோனம். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.இந்த தம்பதிக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சுக்பீர் சிங் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நடத்தையில் சந்தேகம்
அப்போது அவரது மனைவி சோனம் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்குமோ என்று சுக்பீர் சிங் சந்தேகித்துள்ளார். இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு சோனம் அந்த இளைஞருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தை சுக்பீர் சிங் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் சுக்பீர் சிங் மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தீ வைப்பு
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுக்பீர் சிங் தாலி கட்டிய மனைவி என்று கூட பாராமல் நாற்காலியில் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். வலியால் சோனம் அலறித் துடித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் தீ வீடு முழுவதும் பரவியது.
சுக்பீர் சிங் தலைமறைவு
இதுகுறித்து போலீசாருக்கும் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மனைவி சோனம் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு இரண்டு குழந்தைகளுடன் தப்பித்த சுக்பீர் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























