மேலும் அறிய

புதுச்சேரி ஜிம்மில் உயிருக்கு ஆபத்தான ஊசி மருந்து விற்பனை - பயிற்சியாளர் உட்பட 3 பேர் கைது!

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் ஜிம்மில் உடல் தசைகளை வலுவாக்குவதாகக் கூறி ஆபத்தான ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது

புதுச்சேரி: உடலை கட்டுக்கோப்பாகவும், தசைகளை வலுவாகவும் மாற்ற வேண்டும் என்ற ஆசையில் ஜிம்மிற்கு செல்பவர்களைக் குறிவைத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஊசி மருந்துகளை விற்பனை செய்ததாக ஜிம் பயிற்சியாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஊசியைப் பயன்படுத்திய ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்மில் ரகசியமாக விற்பனை

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் கடலூர் சாலையில் தனியார் உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அரியாங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஜிம்மில் உடல் தசைகளை இறுக்கமாகவும், வலுவாகவும் மாற்றுவதாகக் கூறி, மருத்துவப் பயன்பாட்டிற்கான ஊசி மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அரியாங்குப்பம் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து சம்பந்தப்பட்ட ஜிம்மில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சிக்கிய ஊசி மருந்துகள்

இந்தச் சோதனையின்போது, 'டெர்மைன் மசில் பூஸ்ட்' (Dermaine Muscle Boost) எனக் குறிப்பிடப்படும் ஊசி மருந்துகள் அங்கு விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஊசி மருந்து, மருத்துவ ரீதியாக குறிப்பிட்ட சூழல்களில் பயன்படுத்தப்படும் மருந்து எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்காகப் பயன்படுத்துவதாகக் கூறி ஜிம்மிற்கு வருபவர்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக ஜிம் பயிற்சியாளர் விக்ரமாதித்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆன்லைனில் வாங்கி விற்பனை செய்ததாகத் தகவல்

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு மருந்துக் கடை ஒன்றில் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர் சம்பந்தப்பட்ட ஜிம்மின் வாடிக்கையாளராகவும் இருந்து வந்துள்ளார்.

மேலும், கல்லூரி மாணவரான கிறிஸ்டோபர் நெல்சனுடன் இணைந்து கிருஷ்ணகுமார் ஆன்லைன் மூலமாக ஊசி மருந்துகளை வாங்கியதாகவும், பின்னர் அவற்றை ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வரும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜிம்மில் இருந்த நான்கு ஊசி மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பயிற்சியாளர் உட்பட 3 பேர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமார், கல்லூரி மாணவர் கிறிஸ்டோபர் நெல்சன் மற்றும் ஜிம் பயிற்சியாளர் விக்ரமாதித்தன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், ஊசி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன, அவற்றை யார் யாருக்கு விற்பனை செய்தனர், எத்தனை பேர் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊசியைப் பயன்படுத்திய ஒருவர் தீவிர சிகிச்சையில்!

இதற்கிடையே, இந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வரும் ஒருவர், சம்பந்தப்பட்ட ஊசி மருந்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இதேபோன்று இந்த ஊசியைப் பயன்படுத்திய வேறு சிலரும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த ஊசி மருந்தை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

உடலை விரைவாக கட்டுக்கோப்பாக மாற்ற வேண்டும், தசைகளை பெரிதாக்க வேண்டும் என்ற ஆசையில் மருத்துவர்களின் ஆலோசனையின்றி இதுபோன்ற ஊசி மருந்துகளைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தவறான அளவில் அல்லது உரிய மருத்துவக் கண்காணிப்பின்றி ஊசி மருந்துகளைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான உடலைப் பெற வேண்டும் என்ற நோக்கில் ஜிம்மிற்குச் செல்லும் இளைஞர்களுக்கு, விரைவாக தசைகளை வளர்க்கும் ஆசையைத் தூண்டி ஆபத்தான ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எத்தனை பேர் இதுபோன்ற ஊசி மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருத்துவர்களின் பரிந்துரையின்றி உடல் கட்டமைப்பை மாற்றும் ஊசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்ற விழிப்புணர்வை இந்தச் சம்பவம் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவியிடம் பாலியல் சீண்டல் !! சிசிடிவியில் சிக்கிய தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்
மாணவியிடம் பாலியல் சீண்டல் !! சிசிடிவியில் சிக்கிய தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்
" எவன் கூட தொடர்பு ? " சந்தேகத்தால் சித்ரவதை !! கணவன் கண்முன்னே தீக்குளித்த மனைவி
ஏற்காடு மலையில் கிடந்த சடலம்.. உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? புகைப்படம் வெளியீடு
ஏற்காடு மலையில் கிடந்த சடலம்.. உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? புகைப்படம் வெளியீடு
சட்டத்தின் பிடியில் சிக்கிய 'ராக்கெட் ராஜா': பொறையார் திருட்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு..
சட்டத்தின் பிடியில் சிக்கிய 'ராக்கெட் ராஜா': பொறையார் திருட்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு..
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆதாயம் இல்லாமல் திமுக ஆதரவு கொடுக்கமாட்டாங்க... அடுத்த 6 மாதத்தில் இது எல்லாம் நடக்கும்.. அண்ணாமலை!
Annamalai: ஆதாயம் இல்லாமல் திமுக ஆதரவு கொடுக்கமாட்டாங்க... அடுத்த 6 மாதத்தில் இது எல்லாம் நடக்கும்.. அண்ணாமலை!
திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?
திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
"இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்" - ஸ்டாலினிடம் ராகுல் காந்தி பேசியது என்ன?
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Embed widget