மேலும் அறிய

மனைவியை கொன்று டிவி மேஜையில் பார்சல் செய்த கணவன்: சடலத்துடன் உறங்கிய மகன்கள்!

வாணியின் இளைய மகன் எழுந்து பார்த்த போது டிவியின் அடியிலுள்ள டேபிள் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை பார்த்துள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்..மனைவியை  அடித்துக் கொலை செய்து விட்டு கணவன் தலை மறைவு..
 
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 46. இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி வயது 41.  இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கௌதம் ( 15 ) ஹரிஷ் ( 12 ) என்ற 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் அடிக்கடி குடித்து விட்டு வாணியுடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும் வாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடிக்கடி அடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு திங்கட்கிழமை இரவு ரமேஷ் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ரமேஷின் மூத்த மகன் கௌதம், அம்மா எங்கே என்று கேட்ட போது அம்மா வேறு ஒருவருடன் ஓடிப் போய் விட்டார்கள் என்று கூறி சென்றுள்ளார்.
அன்று இரவு வீட்டில் கௌதம் மற்றும் அவரது நண்பர் மட்டுமே இருந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை முழுவதும் வாணியின் மகன்கள் தனது தாயை தேடி உள்ளனர். மேலும் தந்தையையும் காணவில்லை என உறவினர்கள் இடத்தில் கூறி உள்ளனர்.  கௌதம் , ஹரிஷ் மற்றும் கௌதமின் நண்பர் ஒருவர் என மூன்று பேர் மட்டுமே வீட்டில் உறங்கி உள்ளனர்.  வாணியின் இளைய மகன் எழுந்து பார்த்த போது டிவியின் அடியிலுள்ள டேபிள் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கண்டுள்ளார். 

மனைவியை கொன்று டிவி மேஜையில் பார்சல் செய்த கணவன்: சடலத்துடன் உறங்கிய மகன்கள்!
 
மேலும் லேசான துர்நாற்றமும் வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள  வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலே வந்து பார்த்த போது துர்நாற்றம் வீசியதால் உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீசார் டிவி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் டேபிள் அடியில் துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வாணியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாணியின் கணவர் ரமேஷை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget