Spiderman Couple: தோழியுடன் ஸ்பைடர்மேன் உடையில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ்
Delhi Spiderman Couple: டெல்லியில் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர்வுமன் வேடமிட்ட ஜோடி பைக்கில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பைடர்மேன் வேடமிட்ட டெல்லியைச் சேர்ந்த ஜோடி இருவர், பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதே ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலானது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஹெல்மெட் இல்லாமல் சூப்பர் ஹீரோ உடை அணிந்து பைக்கில் செல்வதைக் காண முடிகிறது.பின்னால் அமர்ந்துள்ள ஒரு பெண், ஸ்பைடர்வுமன் உடையணிந்து பெண்மணி இருந்துள்ளார்.
டைட்டானிக் போஸில் ஸ்பைடர்மேன்:
இருவரும் தலைக்கவசம் இல்லாமல் செல்லும் வீடியோவில், திடீரென கையை விட்டு ஓட்டினார் ஸ்பைடர் மேன். அதையடுத்து, இரு கையையும் நீட்டியபடி ஓட்ட, அவருக்கு ஈடாக ஸ்பைடர் வுமன்னும் கையை நீட்ட, இருவரும் டைட்டானிக் பட பாணியில் போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், காவல்துறையினர் கண்களில் பட்டு விட்டது. இன்ஸ்டாகிராமில் இவர்களின் வீடியோ 9.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 77,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
வீடியோவில் இருப்பவர், டெல்லியின் நஜாப்கரைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யா மற்றும் 19 வயதான அஞ்சலி இருவரும் என தெரிய வந்தது. இவர்கள் இருவரும் இன்ஸ்டா பிரபலம் என் கூறப்படுகிறது. அவர்கள் வண்டியில் நம்பர் பிளேட் இல்லை; தலைக்கவசம் இல்லை; ஓட்டுநர் உரிமம் இல்லை இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாதது, ஸ்டண்ட செய்ததை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் விரித்த வளையில், ஸ்பைடர்மேன் சிக்கியது பெரும் பேசு பொருளாகி உள்ளது.
இளைஞர்களே கவனம்:
இளம் வயதினர், இதுபோன்ற சாகசங்களை சட்டத்துக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருவதை காண முடிகிறது. இளம் வயதில், சில சாகசங்களை செய்ய மனம் தூண்டப்படுவது இயல்புதான். ஆனால், இதுபோன்ற சாகசங்கள் மற்றவர்களை பாதிக்கும் போது சமூகத்து பாதிப்புக்குள்ளானதாக மாறிவிடுகிறது. சாலைகளில் கை விட்டு ஓட்டும் போது பாதுகாப்பற்ற வகையில் பயணமானது, இளைஞர்களை மட்டுமல்ல சாலையில் செல்வோரையும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம். எனவே இளம் வயதினர் , சமூக பொறுப்பை உணர்ந்து, பொறுப்புடன் செயல்படுங்கள்.