மேலும் அறிய

Gandhidham Express: குமரி அருகே அதிர்ச்சி.. தண்டவாளத்தில் மாட்டின் தலை..ரயிலை கவிழ்க்க சதியா?

குஜராத் மாநிலம் காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில் (எண்: 20924)  இயக்கப்பட்டு வருகிறது.2

கன்னியாகுமரி அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து தினம்தோறும் நாகர்கோவில் வழியாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில் (எண்: 20924)  இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் முதல் நாள் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.50 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். திருவனந்தபுரம் வழியாக தமிழ்நாட்டிற்குள்  நாகர்கோவில் வந்து பின்னர் இந்த ரயில் திருநெல்வேலிக்கு வந்து செல்கிறது. வாரம் ஒருமுறை இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. 

அந்த வகையில் இந்த ரயில் நேற்று முன்தினம் வழக்கம்போல புறப்பட்டு நேற்று இரவு நாகர்கோவில் வந்தடைந்தது.பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்டது. அந்த ரயில் பார்வதி புரம் அருகே வந்த போது திடீரென ரயில் எதோ ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் மோதுவது போன்று இருந்துள்ளது. இதனால் ரயிலை நிறுத்திய லோகோ பைலட், இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓடு உள்ளிட்டவை இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பார்வதிபுரம் ரயில்வே கிராசிங்கிற்காக இருக்கும் கேட் கீப்பரிடம் விவரத்தை சொல்லி எச்சரித்துள்ளார். உடனடியான அவர் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே அதிகாரிக்கும் தகவலை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தையும் ஆய்வு செய்தனர்.

இதில் ரயில் வந்து செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பு சிலர் இருசக்கர வாகனத்தில் அந்த பக்கம் வந்ததாக கேட் கீப்பர் தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ்நாட்டில் தொடரும் அசம்பாவிதங்கள் 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ரயில்களை நோக்கி பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. தண்டவாளங்களில் கற்கள், சிலாப்புகள், லாரி டயர்கள் என அனைத்தையும் வைத்து ரயில்களை கவிழ்க்க சதி செய்வது, ஓடும் ரயில்களில் கல்லெறிவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Embed widget