7 வயது சிறுமி ஹேமலதா அதிர்ச்சி அடங்குவதற்குள் செஞ்சியில் அடுத்த கொடூரம்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
செஞ்சியில் சிறுதி காணாமல் போல சம்பவம் அடங்குவதற்குள் அப்பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி மாயமாகி கிட்டத்தட்ட 25 நாட்கள் மேலாகிறது. முதலில் காவல் துறை விசாரித்த நிலையில் பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 18 நாட்களாகச் சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் சிறுமியை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் செஞ்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
14 வயது சிறுவன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளான். தண்ணீர் குடித்துவிட்டு வீட்டில் இருந்த குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் அந்த சிறுவனை கடுமையாக கண்டித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
குழந்தையின் தந்தை மீது தாக்குதல்
இதுதொடர்பாக சென்னையில் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்த தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை தாய் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் இன்று காலையில் சிறுவனின் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை கேட்டபோது, சிறுவனும் அவருடைய பெற்றோர்களும் குழந்தையின் தந்தையை தாக்கியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சைல்ட் லைனில் (1098) புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை, தாய் மற்றும் குழந்தை ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























