மேலும் அறிய

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடத்தல் - 6 பேர் கைது; விசிக பிரமுகர்களுக்கும் தொடர்பு

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி பிரமுகரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியை அடுத்த முனியன்கொட்டாயைச் சேர்ந்தவர் சிவசம்பு (35). இவர் மளிகைப் பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை செய்து வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராகவும் உள்ளார்.

கடத்தி பணம் கேட்டு மிரட்டல்

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணியளவில் சிவசம்பு மோட்டார் சைக்கிளில் அவரது மனைவி பிரியாவுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் இவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் சிவசம்புவை வழிமறித்துள்ளது.

தொடர்ந்து இந்த கும்பல் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டி, சிவசம்புவை மட்டும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவரது மனைவியை அங்கேயே விட்டுச் சென்ற கும்பல், தொடர்ந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். 

உஷாரான கும்பல்.... மடக்கிப் பிடித்த காவல் துறை

இந்நிலையில், முன்னதாக இதுகுறித்து பிரியா கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சிவசம்புவை தேடி வந்த காவல் துறையினர், அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடினர்.

இதில் சிவசம்புவைக் கடத்திய கும்பல், பர்கூர் அடுத்த ஒப்பதவாடி அருகே உள்ள லட்சுமிபுரம் அருகே சிவசம்புவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால், காவல் துறையினர், தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல் கும்பல் சிவசம்புவின் கண்ணைக் கட்டி விட்டு அவரை சாலையோரமாக இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவசம்புவை காவல் துறையினர்  மீட்டனர். 

மேலும், கடத்தல் கும்பல் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள எஸ்.மோட்டூரைச் சேர்ந்த பழனி (32), முருகன் வட்டத்தைச் சேர்ந்த குமரவேல் (28), பர்கூர் ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த விக்ரம் (21), திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் மணி என்ற மணிகண்டன் (34), தோரணம்பதி மணி (30), ஜெகதேவி முரளி (42) ஆகிய ஆறு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். 

விசிக பிரமுகர்களும் அடக்கம்...

மேலும், இந்தக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்களான செட்டியம்பட்டியைச் சேர்ந்த அரி என்கிற கணபதி (32), கந்திலி இர்பான் (34) ஆகிய இரண்டு பேரை  காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

மேலும், சிவசம்புவை கடத்தியதற்கான காரணம் குறித்து கைதான ஆறு பேரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணின் புகைப் படங்களை மார்பிங் செய்து திருமண மிரட்டல் " மருந்தக பொறுப்பாளர் கைது
வத்தலக்குண்டு: போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி ராஜா சுட்டுப்பிடிப்பு! நடந்தது என்ன?
வத்தலக்குண்டு: போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி ராஜா சுட்டுப்பிடிப்பு! நடந்தது என்ன?
விவசாய நிலங்களில் மின் கம்பிகள் திருட்டு; கிராம மக்களிடம் சிக்கிய 3 பேர்...
விவசாய நிலங்களில் மின் கம்பிகள் திருட்டு; கிராம மக்களிடம் சிக்கிய 3 பேர்...
டெல்லி கார் வாங்கித் தருகிறேன்! ரூ.1 கோடி வரை சுருட்டிய விழுப்புரம் நபர் கைது...
டெல்லி கார் வாங்கித் தருகிறேன்! ரூ.1 கோடி வரை சுருட்டிய விழுப்புரம் நபர் கைது...

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget