சிவகங்கை ரிமோட் வெடிகுண்டு வழக்கு ; நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு..
ரிமோட் வெடி குண்டு வைத்து சிவகங்கை நகர் மன்ற தலைவர் முருகன் கொலை வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 15ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு. திமுக மாவட்ட துனை செயலாளர் மணிமுத்து உட்பட 8எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் 2007ம் ஆண்டு நகராட்சியின் தலைவராக இருந்தவர் முருகன். தி.மு.க., வைச் சேர்ந்த முருகன் கட்சியில் பலமாக வளர்ந்து வந்தார். இவரின் வளர்ச்சி சிலருக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2007-ம் ஆண்டு ஜூன் 29ல் பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்த நகராட்சி அலுவலகத்தில் இருந்து தனது ஸ்கார்பியோ காரில் புறப்பட்டு சென்றார். மெயின் ரோட்டில் திரும்பும்போது, காரில் ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ரிமோட் மூலம் வெடிக்கவைக்கப்பட்டது.
#Abpnadu Sivagangai District Sessions Court rules after 15 years in the murder case of Sivagangai town council chairman Murugan with a remote bomb. #sivagangai | #madurai | #dmk | #court | #issues | #sivaganga | #Abpnadu | @reportervignesh | @kathir25567921 | @gurusamymathi . pic.twitter.com/hBvA7jPu1I
— Arunchinna (@iamarunchinna) February 23, 2022
இதில், நகர்மன்ற தலைவர் முருகன் பலியானார். அவரது ஓட்டுநர் பாண்டி என்பவருக்கு இரண்டு காலும் துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை மணிமுத்து, மந்தக்காளை, பாலா, சரவணன், மாமுண்டி(எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகப்பாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது அப்போதைய டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்தார்.
#Abpnadu ரிமோட் வெடி குண்டு வைத்து சிவகங்கை நகர் மன்ற தலைவர் முருகன் கொலை வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 15ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.@Rameshkkr101 |@Deepu45342616 | #DMK | #sivaganga | @LPRABHAKARANPR3 | @Syaanandhakumar | @reportervignesh pic.twitter.com/F3cDLPB4yf
— Arunchinna (@iamarunchinna) February 23, 2022
இவ்வழக்கில் அரசு தரப்பு உட்பட 139 பேர் சாட்சிகளாக உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாலா, முருகபாண்டி இருவரும் உயிரிழந்ததுடன் வீரபாண்டி என்பவர் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி சாய் பிரியா தீர்ப்பு அளித்தார் அதில் அரசு தரப்பில் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கபடத்தால் அனைவரும் விடுதலை செய்யபட்டனர். இந்த வழக்கு காலையில் இருந்தே பரப்பரபாக இருந்த நிலையில் விடுதலை செய்யபட்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சத்தீஸ்கரில் காணமல்போன CRPF வீரரை கண்டுபிடிக்க கோரிய ஆட்கொணர்வு மனு - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு