உஷார் மக்களே.. Olx-இல் பொருள்களை விற்கும்போது 5 லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது?
பொதுமக்களும் ஆன்லைனில் நடைபெறும் நூதன மோசடிகளில் சிக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முறையாக கையாள வேண்டும் என்ற கோரிக்கையும் போலீசார் முன்வைக்கின்றனர்.
மும்பையில் olx மூலம் ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இன்றைய சமூகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு ஆன்லைன் பரிவர்த்தனைகளும் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையோர வியாபாரி, பழக்கடைகள், சலூன் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை எங்கும் பேடிஎம், கூகுள் பே, யுபிஐ செயலிகள் மூலம் தான் பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இதற்கு அனைவரும் அடிக்ட் ஆகிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முன்னேற்றம் பல நேரங்களில் பல்வேறு நூதன மோசடிகளுக்கும் வழிவகுக்கிறது. இதோடு மட்டுமின்றி தற்போது பயன்படுத்தியப் பழைய பொருள்களையெல்லாம் ஓஎல்எக்ஸ், சுலேகா டாட் காம் போன்ற விளம்பர தளங்களின் மூலம் விற்பனை செய்யும் வசதியும் நம்மிடம் உள்ளது. இதன் மூலம் சுமுகமாக பொருள்களை விற்பனை செய்துவந்தாலும் சில நேரங்களில் ஏற்படும் நூதன மோசடி தான் நம்மை ஒவ்வொரு முறையும் இதுப்போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் நம்மைப் பாதுகாக்கிறது. ஆனாலும் பல நேரங்களில் நம்மையும் அறியாமல் நூதன முறையில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் சமீபத்தில் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் தாதர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னிடம் உள்ள தங்கும் அறை பெட்டியை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து உறவினர் மற்றும் நண்பர்களி்டம் தெரிவித்தும் எந்தவித பதிலும் வரவில்லை என்பதால் அடுத்தபடியாக இந்தப்பொருளை ஓஎல்எக்ஸ் இலவச விளம்பர தளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பிரிதீப் குமார் என்ற நபர், தனக்கு அந்தப் பொருள் தேவைப்படுவதாகவும், தான் ராணுவ அதிகாரி என்றும் அதற்கான சில ஆவணங்களையும் அப்பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். ராணுவ அதிகாரிதானே என்ற நம்பிக்கையைில் பெட்டியை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இதனையடுத்து கூகுள் பே எண்ணில் இருந்து ரூ. 2 அனுப்புகிறோம். இதனை உறுதிப்படுத்திய பின்பாக அனைத்துப் பணத்தையும் அனுப்புவதாக அப்பெண்ணிடம் பிரேம் குமார் என்ற நபர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்பணம் அப்பெண்ணிற்குக் கிடைக்கவில்லை எனவும் கூறியதையடுத்து, உங்கள் அக்கவுன்ட் நம்பரிலிருந்து எங்களுக்கு நீங்கள் ரூ.2 முதலில் அனுப்பி வைக்குமாறும், அதனை சேவ் செய்த பிறகு நாங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அப்பெண் அவ்வாறு மேற்கொள்ளும் போது அப்பெண்ணின் QR code பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் அப்பெண்ணின் கணக்கில் இருந்து டெபிட் ஆகியுள்ளது. என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி இருந்த நிலையில் தான் அப்பெண்ணின் வங்கிக்கணக்கிலிருந்து ரூபாய் 4.55 லட்சம் வரை டெபிட் ஆகிவிட்டது. இதனையடுத்து தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அப்பெண் உடனடியாக, நடந்த விஷயங்களையெல்லாம் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புகாரினை ஏற்றுக்கொண்ட Bhoiwada காவல்நிலையப் போலீசார் ராணுவ வீரர் என பொய்யாக ஏமாற்றிய நபரின் மீது தொழில்நுட்பச்சட்டத்தின் கீழ் ஏமாற்றுதல் மற்றும் ஆள் மாறாட்ட வழக்கினை பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி ஒஎல்எக்ஸ் மூலம் ஆன்லைன் மோசடி நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களும் இதுபோன்று எந்த பிரச்சனைகளிலும் சிக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முறையாக கையாள வேண்டும் என்ற கோரிக்கையும் போலீசார் முன்வைக்கின்றனர்.