மேலும் அறிய
Advertisement
தருமபுரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்ததரவு - கணவன், மனைவி போக்சோவில் கைது
பெற்றோரின் புகாரின் பேரில் பாலியல் தொந்தரவு செய்த ஓம்சக்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கவிதா உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்
தருமபுரி அருகே 16 வயது சிறுமியை, அவரது பெற்றோர் உறவினர் வீட்டில் தங்க வைத்து, படிக்க வைத்து வந்துள்ளனர். தொடர்ந்து சிறுமி தங்கியிருந்த வீட்டில், மேல்மாடி வீட்டில், ஓம்சக்தி-கவிதா தம்பதியினர் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி, சிறுமி பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது கவிதா, சிறுமியை மேலே அழைத்துள்ளார். அப்பொழுது சிறுமியிடம் பேசிய கவிதா, உனது மாமா உன் மீது ஆசைப்படுகிறார். வீட்டிற்குள் போ, நீ அவர் சொல்லும் படி கேள் என்று சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுத்துள்ளார்.
அப்பொழுது உன்னை என் தங்கச்சி தான் படிக்க வைக்கிறார். நீ வீட்டிற்குள் போவதில்லை என்றால், படிக்க முடியாமல் போய்விடும். மேலும் ஓசூரில் உள்ள உனது தாயை, ஓம்சக்தி கொலை செய்துவிடுவார் என மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியை வீட்டினுள் அடைத்து கவிதா வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவிதாவின் கணவர் ஓம்சக்தி சிறுமியின் வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும் சிறுமியின் பெற்றோர் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ஓம்சக்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கவிதா உள்ளிட்ட இருவரையும் பிடித்த தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர்து, போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த கணவனுக்கு உடந்தையாக மனைவி இருந்த சம்பவம், தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
8 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றதாக தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் மீது புகார்
தருமபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வகுப்பு படித்து வந்த சிறுமி, தினமும் பள்ளிக்கு அப்பள்ளியின் வாகனம் மூலம் சென்று வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு எதிரில், பள்ளி வாகன ஓட்டுனரிடம் தன்னுடைய தந்தை இருப்பதாக பொய் சொல்லி பேருந்தில் இருந்து இறங்கி உள்ளார். அதனை அடுத்து பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, மாணவி காலையிலிருந்து பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையினர் விசாரணை செய்ததில் பள்ளியில் சில வாரங்களுக்கு முன் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அடுத்த புலியூர் பகுதியை சார்ந்த முபாரக் என்பவர் பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் இவ்வழக்கை மொரப்பூர் காவல் துறையினர் துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று புகார் அளித்துள்ளனர். தருமபுரியில் 8ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து தன்னிடம் பயின்ற மாணவியை அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion