Student Murder: ரயில் நிலையத்தில் மாணவியை கொலை செய்த வழக்கு: கைதான சதீஷி-ன் முந்தைய வழக்கு விவரம் இதுதான்!
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் கைதான சதீஷி-ன் முந்தைய வழக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரி மாணவி கொலை வழக்கில் அக்டோபர் 14 ஆம் தேதி சதீஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, கொலையாளி சதீஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொலையாளி சதீஷ் தொடர்பான முந்தைய வழக்கு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முந்தைய வழக்கு:
கடந்த மே மாதம் 23 ஆம் தேதி, கல்லூரி வாயிலில், கல்லூரி மாணவியை தாக்கியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. மாணவியை கல்லூரிக்கு வெளியில் வைத்து தாக்கிய வழக்கில் சதீஷ் மீது வாய்தகராறு செய்ததாக சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் வெளியாகியுள்ளது.
குற்ற சம்பவத்தின் பின்னணி
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து,வரும் பெண் தலைமை காவலரின் மகள் சத்தியா (20), தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.