மேலும் அறிய

Crime: எடப்பாடியில் காரில் வைத்து மான் கறி விற்பனை - ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

கடலூர் நயினார்பாளையம் வனப்பகுதியில் வேட்டையாடிய 2 மான்களை கறியாக வெட்டி, சொகுசு கார் மூலம், எடப்பாடி அடுத்த ஆவணியூர் பகுதியில் கிலோ ரூ.400க்கு விற்பனை செய்து வந்ததாக, விசாரணையில் தெரிய வந்தது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள ஆவணியூர் புறப்பட்ட சாலை சந்திப்பில் இருவர் சொகுசு காரில் வந்து மான் கறி விற்பனை செய்து வருவதாக எடப்பாடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எடப்பாடி காவல்துறையினர், அங்கு சந்தேகபடும் படியாக சொகுசு காருடன் நின்றிருந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ய முயற்சித்தனர். 

Crime: எடப்பாடியில் காரில் வைத்து மான் கறி விற்பனை - ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

அப்போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், காருடன் இருந்த மற்றொரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையில் பிடிபட்ட நபர் கடலூர் மாவட்டம், சிறுபாக்கம், வடக்கு தெரு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் தானுவேல் என்பதும், அவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பழனி என்பவருடன் சேர்ந்து, கடலூர் மாவட்டம் நயினார்பாளையம் வனப்பகுதியில் வேட்டையாடிய 2 மான்களை கறியாக வெட்டி, சொகுசு கார் மூலம், எடப்பாடி அடுத்த ஆவணியூர் பகுதியில் கிலோ ரூ.400க்கு விற்பனை செய்து வந்ததாக, விசாரணையில் தெரிய வந்தது. 

Crime: எடப்பாடியில் காரில் வைத்து மான் கறி விற்பனை - ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

இதுகுறித்து மேட்டூர் வனசரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வன சரக அலுவலர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவர் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்ததுடன் அவரிடம் இருந்த மான் கறியை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எடப்பாடி பகுதியில் மான் கறி விற்பனை செய்த நபர்கள் பிடிபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Embed widget