மேலும் அறிய

“2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி ஏன் கொலை செய்தேன்?” - தாய் பரபரப்பு வாக்குமூலம்

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இரண்டு குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முயற்சித்ததாக வாக்குமூலம்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார், கூலித் தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு விக்னேஷ், சதீஷ்குமார் என 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 28 ஆம் தேதி இரவு, வீட்டின் அருகேயுள்ள செப்டிக் டேங்கில் விஜய குமாரின் குழந்தைகள் இருவரும் விழுந்து விட்டதாக கூறி, இளவரசி அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு இருந்தவர்கள் விரைந்து சென்று, செப்டிக் டேங்கில் விழுந்து கிடந்த 2 குழந்தைகளை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இளவரசி தகாத உறவு விவகாரத்தில், தன்னுடைய 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்து விட்டதாக, விஜய குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, இளவரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து இளவரசி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியது, "எனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபரிடம் உறவு இருந்தது. இதையறிந்த எனது கணவர் விஜயகுமார், தகாத உறவை கைவிடும் படி கூறி என்னை கண்டித்தார். இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 28 ஆம் தேதி, இது தொடர்பாக மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, என்னை கொல்லாமல் விட மாட்டேன் என கூறி விட்டு, கணவர் வெளியே சென்று விட்டார்.

இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். பின்னர், வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில், 2 குழந்தைகளையும் வீசினேன். பின்னர், நானும் டேங்கின் உள்ளே குதித்தேன். அப்போது, திடீரென பயத்தில் அலறினேன். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து என்னையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால், அதற்குள் குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்" இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இளவரசியை கைது செய்த போலீசார், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget