மேலும் அறிய

Crime: கள்ளக்காதலை கண்டித்த மனைவி.... கணவர் தூக்கிட்டு தற்கொலை..!

காலை எழுந்து மனைவி பார்த்தபோது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் கோரிமேடு ஏடிசி நகர் பகுதியில் தீபக், தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் தகாதஉறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கணவர் தீபக் கள்ளக் காதலியுடன் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக தீபக் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளார். அப்போது கள்ளகாதலியை விட்டுவிட்டு தன்னுடன் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தீபா உறங்க சென்றபோது கணவர் வீட்டிற்குள் தன்அணிந்திருந்த வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எழுந்து மனைவி பார்த்தபோது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதுதொடர்பாக அழகாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக மனைவி தீபா மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்

Embed widget