மேலும் அறிய

செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் திருப்பம் - ஏரி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதா வழக்கில் திடீர் திருப்பம் – ஏரி அருகே முட்புதரில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!

விழுப்புரம்  : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஒரு மாதத்திற்கும் மேலாக மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடி வந்த நிலையில், பரதன்தாங்கல் கிராமத்தில் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் எலும்புக்கூட்டை மீட்டுள்ள நிலையில், அது மாயமான சிறுமியுடையதா என்பது குறித்து தடயவியல் பரிசோதனை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான வடிவேலு - பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி). இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

பின்னர் இரவு வழக்கம்போல் சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். இந்நிலையில், மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் சிறுமி குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு சிறுமியைத் தேடும் பணியிலும், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்துவதிலும் ஈடுபட்டு வந்தனர்.

23 நாட்களாகியும் கிடைக்காத துப்பு

சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 23 நாட்களாக ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுமி காணாமல் போன நேரத்தில் கிராமத்தில் இருந்தவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் எனப் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையும் நடைபெற்றது.

இருப்பினும், சிறுமி எங்கு சென்றார், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்திற்கு வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார்.

நான்கு தனிப்படைகள் அமைத்து காட்டுப்பகுதியில் சோதனை

டி.ஐ.ஜி. விக்ரமன் உத்தரவின் பேரில், சிறுமியைத் தேடும் பணியில் புதிய அணுகுமுறை கையாளப்பட்டது. இதற்காக வனத்துறையினர், தனிப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒருங்கிணைக்கப்பட்டு தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஒரு குழுவிற்கு 10 பேர் வீதம் மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இன்று காலை முதல் ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகில் உள்ள சிறுவாடி காப்புக்காடு பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. காட்டுப்பகுதியில் உள்ள புதர்கள், பாறை இடுக்குகள், மறைவான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஒவ்வொரு பகுதியாகச் சல்லடை போட்டுத் தேடினர்.

நீண்ட நேரமாக நடைபெற்ற இந்தத் தேடுதல் வேட்டையின்போது, ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகிலுள்ள பரதன்தாங்கல் கிராமத்தில் ஏரி அருகே உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முட்புதரில் மனித எலும்புக்கூடு – போலீசார் அதிர்ச்சி

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மனித எலும்புக்கூட்டைக் கண்டதும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, எலும்புக்கூடு கிடந்த பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்து, பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் எலும்புக்கூட்டை மீட்டு, அது தொடர்பான விசாரணையைத் தொடங்கினர். எலும்புக்கூடு அங்கு எவ்வளவு காலமாக இருந்தது, அது யாருடையது, அந்தப் பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹேமலதாவுடையதா? தடயவியல் பரிசோதனைக்காக காத்திருப்பு

ஒரு மாதத்திற்கும் மேலாக மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடி வந்த நிலையில், தற்போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மாயமான சிறுமி ஹேமலதாவுடையதுதானா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தடயவியல் மற்றும் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அதன் அடையாளம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுமி காணாமல் போன நாளிலிருந்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து தேடுதல் பணியின் முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது ஏரி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருப்பது ஆலம்பூண்டி, பரதன்தாங்கல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி ஹேமலதாவின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், தடயவியல் பரிசோதனை முடிவுகள் இந்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" பெற்றோரிடம் கதறி அழுத 12 வயது சிறுமி " அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளி கைது
Portronics Luxcell: இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு புதிய டிஜிட்டல் வசதிகள் ! தரிசனம் இனி எளிது!
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு புதிய டிஜிட்டல் வசதிகள் ! தரிசனம் இனி எளிது!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
Cyclone Akwan: நவம்பர் 16ல் உருவாகிறது புயல்.. அக்வான் என்றால் என்ன தெரியுமா? தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை?
Cyclone Akwan: நவம்பர் 16ல் உருவாகிறது புயல்.. அக்வான் என்றால் என்ன தெரியுமா? தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
Embed widget