மேலும் அறிய

ஆடி கார் கேட்டு மனைவியை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர கணவன் கைது..!

பிரேத பரிசோதனை முடிவில் தனஸ்ரீயாவின் உடல் முழுவதும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட அறிகுறிகள் உள்ளதாக தெரியவந்தது.

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனஸ்ரீயா, பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் சமாதானம் செய்து கணவர் கீர்த்திராஜ் மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆடி கார் கேட்டு மனைவியை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர கணவன் கைது..!

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயா தலைப் பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தனஸ்ரீயாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தனஸ்ரீயாவின் கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில் தனஸ்ரீயாவின் உடல் முழுவதும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட அறிகுறிகள் உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து கீர்த்திராஜ் கைது செய்யப்பட்டார்.

ஆடி கார் கேட்டு மனைவியை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர கணவன் கைது..!

முன்னதாக இதுகுறித்து கூறிய தனஸ்ரீயாவின் பெற்றோர், திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே தங்களது மகள் மகிழ்ச்சியாக இருந்தார். அதன்பின் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமை செய்து வந்ததாகவும், வரதட்சணையாக ஆடி கார் கேட்டு வந்த நிலையில் ஒரு மாத காலமாக மகள் வாழப்பிடிக்காமல் தங்களது வீட்டில் இருந்து வந்ததாகவும், நேற்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டு தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று இரவு 8:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்திராஜ் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்த போது உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். வீடு முழுவதும் ரத்தமாக இருந்தது. வீட்டிலிருந்து கிரிக்கெட் மட்டையிலும் ரத்தம் இருந்தது. கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. வரதட்சணை கொடுமையால் கொடூரமாக தனது மகளை கொலை செய்தவரை கைது செய்து, மரணத்திற்கு முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget