மேலும் அறிய

Crime: இபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கைவரிசையை காட்டிய பிக்பாக்கெட் திருடர்கள்

பணக்கட்டினை திருடிய போது அந்த நிர்வாகியின் தொடையில் பிளேட்டால் அறுக்கப்பட்டதில் அதிமுக முக்கிய நிர்வாகிக்கு காயம் ஏற்பட்டது.

சேலம் மாநகர் தாதகாப்பட்டி கேட் பகுதியில் அதிமுக சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

இந்த நிலையில் மேடையில் நின்றிருந்த நிர்வாகிகளிடம் பிக் பாக்கெட் கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. குறிப்பாக, பகுதிக் கழகச் செயலாளர், ஒன்றிய செயலாளர் என 20க்கும் மேற்பட்டோர் இடம் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை அந்த கும்பல் திருடி உள்ளதாக கூறப்படுகிறது. மேடையில் இருந்து நிர்வாகிகள் கீழே வரும் வேளையில் சட்டை, டிரவுசர் மற்றும் உள்ளாடை பாக்கெட்டில் இருந்து பிக்பாக்கெட் திருடர்கள் பணத்தை எடுத்ததாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Crime: இபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கைவரிசையை காட்டிய பிக்பாக்கெட் திருடர்கள்

அதிலும், அதிமுக முக்கிய நிர்வாகி பொதுக் கூட்டத் செலவிற்காக இரண்டு பாக்கெட்களில் தலா ஐம்பதாயிரம் வைத்திருந்ததாகவும், அதில் ஒரு பாக்கெட் கிழித்து 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டினை திருடிய போது அந்த நிர்வாகியின் தொடையில் பிளேட்டால் அறுக்கப்பட்டதில் அதிமுக முக்கிய நிர்வாகிக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் இருந்த ஆம்புலன்சில் முதலுதவி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிமுக தரப்பில் எந்தவித புகார் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் குறைந்த அளவே பாதுகாப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சேலம் மாநகர பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹிக் பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் யார் பணம் வைத்து உள்ளார்கள் என்பதை அறிந்து ஒவ்வொருவரிடமிருந்தும் 50 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை திருடிய நபர் அதிமுக நிர்வாகியாக இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget