மேலும் அறிய
Advertisement
கதறி அழுத மனைவி.. கை, கால் காயத்துடன் கைது செய்யப்பட்ட ரவுடி.. பின்னணி என்ன ?
காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் இடத்தை பிடிக்க முயன்ற ரவுடி காதர், திடீரென கைது செய்யப்பட்ட காதரை என்கவுண்டரில் சுட போலீஸ் திட்டம் என கதறிய மனைவி..
தாதா ஸ்ரீதர்
காஞ்சிபுரம் கோவில் நகரமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் கொலை நகரமாக காட்சியளித்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விட்டு வந்த ஸ்ரீதர் தனபாலன் என்பவர் படிப்படியாக வளர்ந்து, காஞ்சிபுரம் நகரத்தில் முக்கிய தாதாவாக வலம் வரத் துவங்கினார். ஒரு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கும், அனைத்து வியாபாரிகள் மற்றும் பல்வேறு தொழில் செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் அவருக்கு பயந்து மாமுல்கள் கொடுத்து வந்தனர்.
அச்சமயத்தில் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொலை மற்றும் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்வது ஆகிய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு காவல்துறையினர், எடுத்த அதிரடி நடவடிக்கையால் தாதா ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு காஞ்சிபுரம் நகரில் அவரது, இடத்தை பிடிப்பதற்கு 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறியது.
ரவுடி தினேஷ்குமார் -தனிகா
ஸ்ரீதரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி
தனிகா என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தனிகா ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 15-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்தனர். இதனை அடுத்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தினேஷ் அணியில் பல குட்டி ரவுடிகள் இடத்தைப் பிடிப்பதற்காக கொலை சம்பவங்களை அரங்கேற்றினர். அதில் தினேஷ் கூட்டாளியாக ஷேக் காதர் பல்வேறு கொலை சம்பவங்களில், ஈடுபட்டு வந்தார். ஷேக் காதர் மீது 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது . அவ்வப்பொழுது காவல் காவல்துறையினால் கைது, செய்யப்பட்டு ஜாமினில் வெளி வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
மனைவி விஜயலட்சுமி புகார்
இந்நிலையில் காதர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்பொழுது இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த காதர் கடந்த ஜூலை மாதம் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்தநிலையில் இன்று மதியம் பழந்தண்டலம் என்ற பகுதியில் தனது தாயைப் பார்க்க காதரை, காஞ்சிபுரம் தனிப்பட்ட போலீசார் இன்று மதியம் கைது செய்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட காதர் இதுவரை எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும், தரவில்லை என்று அவரது மனைவி விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் பயம்
கைது செய்யப்பட்டு நான்கு மணி நேரத்துக்கு மேலாகியும் எந்த தகவலும் தராதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனுதாரர் விஜயலட்சுமி வந்திருந்தபொழுது செய்தியாளர்களை சந்தித்த பொழுது, "என் கணவருடைய நிலைமை என்னவென்று இதுவரை எனக்கு தெரியவில்லை, நான் வழக்கறிஞராக இருக்கிறேன்.
அவர் திரும்பி வருகின்ற நிலையில் ஏன் அப்படி செய்கிறார்கள். எஸ். பி. அவர்களிடம் மனு கொடுக்க வந்தபொழுது அவர் இங்கு இல்லை எனக் கூறுகிறார்கள். என்னுடைய வீட்டுக்காரர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. கணவரை கைது செய்த காவல்துறையினர் இதுவரை எந்த தகவலையும் சொல்லவில்லை. என்கவுண்டர் போன்ற சம்பவத்தில் ஈடுபடுவார்களோ என பயமாக உள்ளது, எனக்கு என் கணவரைப் பற்றி தகவல் தெரிவித்து அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தால் போதும் என தெரிவித்தார்.
தடுக்கி விழுந்ததில் கை மற்றும் காலில் காயம்.
இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி காதரை போலிசார் கைது செய்ய முயற்சித்தபோது தடுக்கி விழுந்ததில் இடது கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கை மற்றும் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் காதர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச் சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion