Crime: ஓவரா ஆடிய காதலன் - எக்ஸ்-உடன் சேர்ந்து ஸ்கெட்ச் - நெய், வைன், வெடித்த கேஸ் - காதலியின் பயங்கர சதி
Crime: லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் முன்னாள் காதலனுடன் சேர்ந்து காதலியை திட்டமிட்டு கொலை செய்த இளம்பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime: காதலனுடன் ஏற்பட்ட பிரச்னையால் அவரை கொல்லை இளம்பெண் முன்னெடுத்த திட்டம் கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
எரிந்த நிலையில் சடலம் மீட்பு:
டெல்லி காந்தி விஹாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஆண்மையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் தீ விபத்து என்று கருதப்பட்ட சம்பவம் விசாரணையின் தொடர்ச்சியாக, தீவிர ஆர்வம் மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் கவனமாக திட்டமிட்டு அந்த நபர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
32 வயதான ராம்கேஷ் மீனா என அடையாளம் காணப்பட்ட யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவருடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்த அம்ரிதா சவுகான் (வயது 21) என்பவரால் தான் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தடயவியல் அறிவியல் மாணவியான அவர், தனது முன்னாள் காதலரான கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் சுமித் காஷ்யப் மற்றும் அவரது நண்பர் சந்தீப் குமார் ஆகியோரின் உதவியுடன் இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்தவர்களாவர்.
காவல்துறை சொல்வது என்ன?
காவல்துறையினரின் தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தடயவியல் அறிவியல் மற்றும் கேஸ் சிலிண்டர் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி கொலையை நிகழ்த்தியுள்ளனர். பின்னர் அதை ஒரு விபத்து போலக் காட்ட அறைக்கு தீ வைத்துள்ளனர். ஆரம்பத்தில் ஏர் கண்டிஷனர் வெடிப்பு விபத்துக்கு காரணமாக கருதப்பட்டது. உண்மையில், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட வெடிப்பினை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அக்டோபர் 5 ஆம் தேதி இரவு, மூவரும் பாதிக்கப்பட்டவரின் ஃபிளாட்டுக்குச் சென்றனர். அங்கு குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் சேர்ந்து ராம்கேஷை கழுத்தை நெரித்து அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் உடலில் எண்ணெய் மற்றும் மதுவை ஊற்றினர். பின்னர் அந்த இடத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். கொலையை மறைக்க தீவிரமாக முயன்றும் அடுத்த சில தினங்களிலேயே அம்ரிதா, சுமித் மற்றும் சந்தீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் என்ன?
அமிர்தா மே மாதத்திலிருந்து ராம்கேஷ் உடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது அந்தரங்க வீடியோக்களை ராம்கேஷ் ரகசியமாக பதிவு செய்ததை அம்ரிதா கண்டுபிடித்து, பலமுறை கெஞ்சியும் அவற்றை நீக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது. இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த அம்ரிதா, தனது முன்னாள் காதலன் சுமித்திடம் மனம் விட்டுப் பேச கொலைக்கான திட்டம் பிறந்துள்ளது.
பக்கா ஸ்கெட்ச்...
குற்றம்சாட்டப்பட்ட மூவரும் அக்டோபர் 5-6 இரவு மொராதாபாத்திலிருந்து டெல்லிக்கு பயணம் செய்து ராம்கேஷ் வசிக்கும் நான்காவது மாடி ஃபிளாட்டில் நுழைந்தனர். அவரை திட்டமிட்டபடி கொலை செய்துவிட்டு,சுமித் தனது கேஸ் விநியோகிக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி எரிவாயு சிலிண்டரை மாற்றி வெடிப்புக்கு தயார்படுத்தியுள்ளார். தப்பிச் செல்வதற்கு முன், மூவரும் புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்த இரும்பு கேட்டில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக ஃபிளாட்டை உள்ளே இருந்து பூட்டி, ஆதாரங்களை அழிக்க மீனாவின் ஹார்ட் டிஸ்க், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களைத் திருடிச் சென்றனர்.
மிஸ் ஆன எஸ்கேப்...
அதேநேரம், இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக, மூன்றில் ஒருவர் அம்ரிதா என்பது உறுதி செய்யப்பட்டதால், நடந்தது விபத்தல்ல கொலை என்பது உறுதியாகியுள்ளது. கூடுதலாக சம்பவத்தின் போது அமிர்தாவின் மொபைல் இருப்பிடம் மற்றும் அழைப்பு பதிவுகள் அவளது பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்தியது. மொராதாபாத்தில் பல சோதனைகளுக்குப் பிறகு அக்டோபர் 18 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் மற்ற இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை, சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





















