மேலும் அறிய

கனடாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த ஈழத் தமிழர் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை

மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடா நாட்டவர் மருத்துவமனையில் உயிரிழப்பு, விமானம் மூலம் உடலை எடுத்து சென்ற உறவினர்கள்

கடந்த 13 ஆம் தேதி இலங்கையை  பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்த லீலாவதி, அவரது மகள் யாழினி மற்றும் மகன் மகிந்தன் (35) ஆகியோர்  செங்கல்பட்டு மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். 

கனடாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த ஈழத் தமிழர் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை
 
அப்பொழுது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் திடீரென மகிந்தனை காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த, தாய் லீலாவதி மற்றும் யாழினி ஆகியோர் அக்கம்பக்கத்தில் தேடியதுடன் இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இடமும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோவில் சுற்றுவட்டார பகுதியில் தேடியும் மகிந்தன் கிடைக்காததால் கடந்த 15ஆம் தேதி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

கனடாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த ஈழத் தமிழர் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை
 
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேல்மருவத்தூர் காவல்துறையினர் காணாமல் போன மகிந்தனை  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில்கடந்த 16 ஆம் பகல் 12 மணியளவில் ஆத்தூர்  பகுதியில் வீதியோரத்தில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த ஒருவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து,  செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இறந்து போன நபர் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த நபர் மகிந்தனாக இருக்கலாம் என்கிற கோணத்தில் நீலாவதியை அழைத்து வந்து உடலை காட்டினர்.  இறந்து போனது தனது மகன் மகிந்தன் என தாயார் லீலாவதி உறுதி செய்தார்‌. தொடர்ந்து உடல்கூராய்வு செய்யப்பட்டு மகிந்தனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட தாய் லீலாவதி மற்றும் சகோதரி யாழினி விமானம் மூலம் கனடாவிற்கு உடலை எடுத்துச் சென்றனர். மேலும் மகிந்தன் மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூருக்கு எதற்கு வந்தார் ? எப்படி வந்தார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!

EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!

ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!

ABP Premium

வீடியோ

Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி

Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்

Air Force Show Chennai: விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
Embed widget