மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே மீட்கப்பட்ட கோயில் சாமி சிலைகள் மீட்பு..!

மயிலாடுதுறை பகுதிகளில் காணாமல் போன கோயில் சிலைகளை தனிப்பட்ட காவல்துறையினர் மீட்டு, இருவரை கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் போன்றவை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின்படி, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். 


மயிலாடுதுறை அருகே மீட்கப்பட்ட கோயில் சாமி சிலைகள் மீட்பு..!

தனிப்படை போலீசார் திருடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில்  மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி, தெற்கு கார்குடியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் 38 வயதான கார்த்திகேயன், தஞ்சாவூர் மாவட்டம்,  இடையநல்லூர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 42 வயதான பாஸ்கர் ஆகிய 2 பேரும் சிலைகளை திருடியது  தெரியவந்தது.

குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சியினர்


மயிலாடுதுறை அருகே மீட்கப்பட்ட கோயில் சாமி சிலைகள் மீட்பு..!

இதனை அடுத்து இருவரையும் கைது  செய்த போலீசார், திருடி விற்பனைக்காக வைத்திருந்த சிவராமபுரம் காவிரி கரை அருகில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து திருடப்பட்ட ஒரு கருங்கல் விநாயகர் சிலை, 1,100 கிராம் எடையுள்ள பித்தளை பூஜை மணிகள், பித்தளை தொங்கு தூண்டா விளக்குகள், சிவராமபுரம் ஸ்ரீராகவேந்திரா மடத்திலிருந்து திருடப்பட்ட  8 கிலோ எடை, அரை அடி உயரம் கொண்ட வீர பிரம்ம கோவிந்தம்மாள் உலோகச் சிலை, 15 கிலோ எடை, முக்கால் அடி உயரம் கொண்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை, திருவாலாங்காடு மஞ்சலாற்றங்கரையில் உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்த ஒரு அடி உயரமுடைய ஐய்யப்பன் பித்தளை சிலை, 1 கிராம் கொண்ட 4 தாலிகள், சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள நாராயணசாமி என்பவர் வீட்டில் திருடப்பட்ட 17.5 கிராம் எடை கொண்ட தாலி, குண்டு, நாணல்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். 


மயிலாடுதுறை அருகே மீட்கப்பட்ட கோயில் சாமி சிலைகள் மீட்பு..!

தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும்  நகைகளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும்  தனிப்படை போலீசார் குத்தாலம்  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை அடுத்து மீட்கப்பட்ட கோயில் சிலைகளை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா துரிதமாக செயல்பட்டு கோயில் சிலைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget