மேலும் அறிய

ராமநாதபுரம் : அக்காவை கொன்றுவிட்டு தலைமறைவான தம்பி..! காதலித்தவரை பிடிக்காதததால் வெறிச்செயல்

தனக்குப் பிடிக்காதவரை காதலித்ததால் ஆத்திரமடைந்து அக்காவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் நேரு நகர் 5-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். தனியார் திருமண மஹால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்தமகள் சுவாதி (வயது27) என்பவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தபோது மறுத்துள்ளார். எம்.இ. படித்துள்ள இவர் மேலும் படிக்கவேண்டும் என மறுத்து வந்தாராம். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுவாதி வீட்டில் இருந்தபோது உடன்பிறந்த தம்பி சரவணன் என்ற சரண்குமார் (21) என்பவரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக அவரின் தந்தை செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வந்தனர். அக்காவை கொலை செய்து விட்டு தலைமறைவான தம்பி சரண்குமாரை போலீசார் தேடிவந்தனர். 

ராமநாதபுரம் : அக்காவை கொன்றுவிட்டு தலைமறைவான தம்பி..! காதலித்தவரை பிடிக்காதததால் வெறிச்செயல்
இந்த நிலையில் மன்னார்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த சரண்குமார் நேற்று ராமநாதபுரம் வந்துள்ளார். அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலை மையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக வல்கள் வெளியாகி உள்ளது.
 
இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்த போது..,”கொலை செய்யப்பட்ட சுவாதி ஆரம்பத்தில் படிக்க வேண்டும் என்று கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவரின் தங்கை சுருதிக்கு மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதன்பின்னர் சுவாதிக்கு மாப்பிள்ளை பார்த்தபோது அப்போதும் மறுத்துள்ளார். இதற்கான காரணம் கேட்டபோது உறவுக்காரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு முதலில் மறுத்த பெற்றோர் அதன்பின்னர் மகளின் பிடிவாதத்தை எண்ணி திருமணம் செய்து வைக்க சம்மதித்து உள்ளனர்.
 
 இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தனது அக்காள் சுவாதி காதலிக்கும் உறவுக்கார பையனை  சரண்குமாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அக்காவிடம் வெளிப்படையாகவே நீ காதலிப்பவரை பிடிக்கவில்லை நீ அவரை திருமணம் செய்யக்கூடாது, வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொள், இனி அவருடன் பேசினால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கூறி வந்துள்ளார்.

ராமநாதபுரம் : அக்காவை கொன்றுவிட்டு தலைமறைவான தம்பி..! காதலித்தவரை பிடிக்காதததால் வெறிச்செயல்
இதற்கு சுவாதி மறுத்து பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு சாப்பிட வந்த சரண்குமார் அக்காள் சுவாதியிடம் இன்னும் அந்த நபருடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறாயா என்று கேட்டுள்ளார். ஆமாம் இது என் வாழ்க்கை நான் தான் முடிவு செய்வேன் உன் வேலையை பார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
 இதை கேட்டு ஆத்திரமடைந்த சரண்குமார் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து அக்கா என்றும் பாராமல் சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்காவை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடந்த  3 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு கூறினர். கைது செய்யப்பட்ட சரவணன் என்ற சரண்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget