மேலும் அறிய
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
ஊரணியில் வண்டல் மண்ணுடன் மணல் அள்ளுவதாக புகார் வந்ததன் அதனடிப்படையில், மணல் அள்ளும் பணியை உடனடியாக நிறுத்திவைக்கவும், மேற்படி இடத்திலிருந்து அனைத்து வாகனங்களையும் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மணல் கொள்ளை (கோப்புப்படம்)
இராமநாதபுரம் வட்டம் திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் மணல் அள்ளியதாக புகார் -விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி
இராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் உள்வட்டம், காரான்குடி கிராமம், சர்வே எண்.134/1-ல் அமைந்துள்ள திப்பாச்சாறுகுண்டு ஊரணியில், விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க வேலமுருகன் என்பவருக்கு இராமநாதபுரம் வட்டாட்சியர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று மணல் எடுத்து சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி காவல் துறையினரால் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் வண்டல் மண்ணுடன் மணல் அள்ளுவதாக புகார்
இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் அவர்களின் 5.8 ஹெக்டேர் பரப்பிலும், இரண்டாவது செயல்முறை 1.80 ஹெக்டேர் பரப்பிலும் வண்டல் மண் எடுக்க முருகுமார் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே அனுமதி வழங்கப்பட்ட திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் வண்டல் மண்ணுடன் மணல் அள்ளுவதாக புகார் வந்ததன் அதனடிப்படையில், மணல் அள்ளும் பணியை உடனடியாக நிறுத்திவைக்கவும், மேற்படி இடத்திலிருந்து அனைத்து வாகனங்களையும் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரணியில் அளவையர் மூலமாக அளவீடு செய்ததில் மண் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது
அதன் அடிப்படையில் இன்று 26.07.2026 உதவி இயக்குநர் (கனிமவளத்துறை), வருவாய் கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் (கனிமம்) மற்றும் உள்வட்ட வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில், மேற்படி ஊரணியில் அளவையர் மூலமாக அளவீடு செய்ததில் மண் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி அனுமதியில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி செயல்பட்ட நபர்கள் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என உதவி இயக்குநர் (கனிமம்) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















