மேலும் அறிய

அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!

மயிலாடுதுறை அருகே சேந்தன்குடி பகுதியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து 1 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து 1 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து நடந்த துணிச்சலான கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம், வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி பகுதி மயிலாடுதுறை - சீர்காழி முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. எப்போதும் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்து காணப்படும் இந்த முக்கியச் சாலையில் மரகதம் என்பவருக்குச் சொந்தமான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு மரகதம் தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை நைஸாக உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

கடையின் கல்லாப்பெட்டியில், மரகதம் தொழில் வளர்ச்சிக்காகத் தனியார் நிதி நிறுவனத்தில் (பைனான்ஸ்) கடனாகப் பெற்று வைத்திருந்த 1 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிக் கொண்டனர். மேலும், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் அள்ளிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

பேட்டரி கடையிலும் கைவரிசை

மரகதத்தின் கடைக்கு மிக அருகிலேயே மற்றொரு பேட்டரி கடையும் இயங்கி வருகிறது. துணிச்சலாகச் செயல்பட்ட அந்தக் கொள்ளைக் கும்பல், அந்தப் பேட்டரி கடையின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்றுள்ளது. அங்கு இருந்த பொருட்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலையில் வழக்கம் போல் கடைகளைத் திறப்பதற்காக உரிமையாளர்கள் வந்து பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இரண்டு கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த கடைகளைப் பார்வையிட்ட காவல் ஆய்வாளர், உரிமையாளர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். 

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

கொள்ளைச் சம்பவம் நடந்த சேந்தன்குடி பகுதி மயிலாடுதுறை - சீர்காழி பிரதான சாலை என்பதால், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் அந்தச் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர்கள் மற்றும் சென்ற வாகனங்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம்

மயிலாடுதுறை நகருக்கு மிக அருகில், அதுவும் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், வியாபாரிகளிடையேயும் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போதிய இரவுக்காவல் மற்றும் ரோந்துப் பணிகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கொள்ளை போன பணத்தையும் பொருட்களையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget