மேலும் அறிய

சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார்.

ராமநாதபுரம், மாவட்டம் கடலாடி அருகே ஆ.புனவாசல் கண்மாய் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.  சேவலின்  காலில் கத்தியை கட்டி, மோதவிடும் இந்த சண்டையில் சேவல் உயிரிழக்கும் அளவிற்கு போட்டி கடுமையாக இருக்கும். இந்த சண்டையை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதும் வழக்கம். ரகசியமாக நடந்த இந்த கத்தி சேவல் சண்டை குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அப்போது போலீஸ் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கிருந்து சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். அதை கண்ட போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பின் அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

இதனைத் தொடர்ந்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரட்டியதால் தான் ஜோதிநாதன் இறந்ததாக கூறி அவரது குடும்பத்தார், கடலாடி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசாரை கண்டித்து கடலாடி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமரசம் செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் எடுபடாத நிலையில், தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தங்களுக்கும் ஜோதிநாதன் இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், ஜோதிநாதனின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேவல் சண்டை பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், அதை காரணம் காட்டி போலீசார் கறார் காட்டி விரட்டியதாகவும், அதனால் அப்பாவி ஒருவர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விவசாயியான ஜோதிநாதனின் இறப்பு அவரது குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ள நிலையில், போலீசார் விரட்டியதில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் உறவினர்களும் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராம மக்களை சமரசம் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சம்பவம் தொடர்பான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கியுள்ளார். வேறு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கடலாடி காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget