மேலும் அறிய

" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?

3 - ம் வகுப்பில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி , ஆசிரியை விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் 8 - ம் வகுப்பில் குற்றவாளியை காட்டிக் கொடுத்து கைது செய்ய வைத்த சம்பவம்

" வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் "

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 23 - ம் தேதி ஆசிரியை ஒருவர் 8 - ம் வகுப்பு மாணவிகளுக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அப்போது யாராவது நம்மை தொட்டால் அச்சமின்றி பெற்றோரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரிவித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கூறி விட்டு, உங்களில் யாருக்காவது இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் என்னிடம் தனியாக வந்து தெரிவிக்க வேண்டும் என ஆசிரியை கூறி உள்ளார்.

சிறிது நேரத்தில் 8 - ம் வகுப்பு மாணவிகளில் ஒருவர் ஆசிரியையிடம் சென்று, 'நான் கடந்த 2021 - ம் ஆண்டு , அதே பள்ளியில் 3 - ம் வகுப்பு படித்த போது (8 வயது), பள்ளி வளாகம் அருகே எனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது, அங்கு வந்தவர் எனது கையை பிடித்து அவரது வீட்டிற்கு இழுத்துச் சென்று ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் நான் கதறி அழுத போது, யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அனுப்பினார்.

நான் பயத்தில் இதுவரை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக சிறுமியின் தாயை அழைத்து இந்த விஷயத்தை கூறி உள்ளார்.

இதனால் மாணவியின் தாய் கதறி அழுதார். பின்னர் ஆசிரியையின் அறிவுறுத்தலின்படி மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவியிடம் அந்த நபரை காட்டும்படி கூறினர். இதில் மாணவியை பலாத்காரம் செய்தது ஆரணி டவுன் கொசப்பாளையம் முனுசாமி தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் ( வயது 42 ) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஐயப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
கனிம சட்டத் திருத்தம்: தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கனிம சட்டத் திருத்தம்: தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget