மேலும் அறிய

Adil Durrani Arrested: பறந்த போன் கால்! நடிகை ராக்கி சாவந்த் கணவர் அடில் துராணி அதிரடியாக கைது! - நடந்தது என்ன?

ராக்கி சாவந்த கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு போஸ்ட்டில் தான் அடில் என்பவரை 2022-ல் திருமணம் செய்து கொண்டதை உறுதிபடுத்தி இருந்தார்.

நடிகர் ராக்கி சாவந்தின் கணவர் அடில் துரானி மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ராக்கி அவருக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் மும்பை காவல்துறையால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் ராக்கி சாவந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

அடில் துரானிக்கு எதிராக தற்போது ஐபிசி பிரிவு 406 மற்றும் 420ன் கீழ் மும்பை ஓஷிவாரா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து மேலும் போலீசார் அதில் ஐபிசி 498 (ஏ) மற்றும் 377 ஆகிய பிரிவுகளையும் சேர்த்தனர். இதற்கிடையே அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடில் தன்னைத் தாக்கி, தனக்குத் தெரியாமல் தனது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாக ராக்கி குற்றம் சாட்டியிருந்தார்.

மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராக்கி, "அவர்  காலையில் என்னை அடிக்க முயற்சி செய்தார். நான் உடனடியாக காவல்துறைக்கு போன் செய்தேன். அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து எனக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இன்று என்னை அடிக்க முயற்சி செய்தபோது எனக்கு பயமாக இருந்தது. நான் ஊடகங்களில் அவரை தவறாகச் சித்தரித்ததாக அவர் குற்றம்சாட்டினார்” என ராக்கி கூறினார். 

View this post on Instagram
 
A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

ராக்கி சாவந்த கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு போஸ்ட்டில் தான் அடில் என்பவரை 2022-ல் திருமணம் செய்து கொண்டதை உறுதிபடுத்தி இருந்தார். மேலும்  மே 29, 2022 அன்று திருமணம் நடைபெற்றதாகவும் அதற்கான சான்றிதழையும் அங்கே அவர் பகிர்ந்திருந்தார்.
அடில் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதாகவும் ராக்கி குற்றம் சாட்டியிருந்தார். 

ராக்கியின் சகோதரர் ராகேஷும் நடிகைக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அடில் ராக்கியை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். “அவர் இப்படிக் கீழ்த்தரமாக செயல்படுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு மூன்று தடவை கூட மன்னித்தோம். அம்மா இறந்த மறுநாள் ராக்கி வீட்டுக்கு உணவளிக்கச் சென்றபோது ராக்கியின் முகம் வீங்கியிருப்பதைக் கவனித்தோம். அழுது கொண்டிருந்தார். எங்கள் உறவினர்கள் அவளிடம் கேட்டபோது, எங்கள் அம்மா இறந்த அதே நாளில் அடில் அவரை அடித்ததாக எங்களிடம் தெரிவித்தார்” என ராகேஷ் குறிப்பிட்டார்.  ராக்கியின் தாயார் இறந்த சில தினங்களில் இவர்கள் இருவருக்குமிடையிலான பிரச்னை வலுவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget