மேலும் அறிய

Raj Kundra Arrest: ராஜ் குந்த்ராவுக்கு ஜூலை 23 வரை போலீஸ் காவல்!

ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா சுமன் அளித்த நேர்காணல் இப்போது கவனம் பெற்றுள்ளது.

ஆபாசப் படத் தயாரிப்பு விவகாரத்தில் ராஜ் குந்த்ராவை ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைக்கச் சொல்லி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Raj Kundra Arrest: ராஜ் குந்த்ராவுக்கு ஜூலை 23 வரை போலீஸ் காவல்!

என்ன நடந்தது? 

முன்னதாக, ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது அடுத்தடுத்து சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா சுமன் அளித்த நேர்காணல் இப்போது கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே வைரலானது ஆனால் அப்போது அதிகம் கவனம் பெறவில்லை. இப்போது ஆபாசப்படம் விவகாரத்தில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.

 அந்த வீடியோவில் பேசியுள்ள நடிகை சங்கரிகா, ''நான் ஒரு மாடல். நான் திரைப்பட உலகில் 3- 4 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த லாக்டவுனில் நான் கண்ட அனுபவத்தை ஷேர் செய்ய விரும்புகிறேன். ஒரு வெப் சீரிஸில் நடிக்க உமேஷ் கமாத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த வெப் சீரிஸை ராஜ்குந்த்ரா தயாரிப்பதாக கூறினார்.நான் ராஜ்குந்த்ரா குறித்து விசாரித்தேன். அவர் தன்னை ஷில்பா ஷெட்டியின் கணவர் என்று அறிமுகம் செய்துகொண்டார். இந்த வெப் சீரிஸில் தொடர்ந்து நடித்தால் பல உயரங்களை தொடலாம் என்று கூறினார். நான் சரியென்று கூறினேன். பின்னர் ஆடிஷனுக்கு அழைப்பு வந்தது. வீடியோகாலில் ஆடிஷன் நடைபெற்றது. அங்கு 3 பேர் இருந்தனர். அதில் ஒருவர் ராஜ்குந்த்ரா என்று நினைக்கிறேன். அவர்கள் என்னை நிர்வாணமாக நடிக்கக் கூறினர். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன்.அவர் இப்படியெல்லாம் செய்திருப்பது உறுதி என்றால் அவர் கைது செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்'' என்றார். ராஜ்குந்த்ராவின் கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில் நடிகையின் குற்றச்சாட்டு வீடியோவும் வைரலாகிறது.முன்னதாக, ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதி செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு பதியப்பட்டது. அதாவது ஆபாசப் படங்களை தயாரித்து அதனை சில ஆப்களுக்கு விற்பனை செய்வதாக புகார். அதன் விசாரணையில் சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விசாரணை தொடர்கிறது என்றார்.கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா மீது, மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது மற்றும் ஆபாச புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜ்குந்த்ரா மும்பை குற்றப்பிரிவுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். வெளியான தகவலின்படி, திரைப்பட  நடிகைகளை நிர்வாணமாக நடித்தவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த படங்கள் பணம் செலுத்தப்பட்டு பார்க்கப்பட்டும் செல்போன் ஆப்களில் வெளியாகின்றன என்கின்றனர் போலீசார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
New Year 2025:
New Year 2025: "இருங்க பாய்" மொமண்டில் கம்பேக் கொடுக்கனுமா? 2025ல் இதை மட்டும் பண்ணுங்க!
Embed widget