Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
Crime Affair: கள்ளக் காதலனுக்காக தான் பெற்ற மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த பெண்ணை, பாகிஸ்தானின் குஜ்ராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime Affair: கள்ளக் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக தான் பெற்ற மூன்று குழந்தைகளை கொலை செய்த சம்பபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு - 3 குழந்தைகளை கொன்ற கொடூரம்:
பாகிஸ்தானைச் சேர்ந்த திருமணமான பெண், தனது காதலனுடன் சேர்ந்து 3 குழந்தைகளை கொன்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட மூன்று சிறுவர்களில் இரண்டு பேர் சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் அடங்குவர். அவர்களின் வயது வெறும் 3 முதல் 7 மட்டுமே ஆகும். இந்த கோர சம்பவமானது லாகூரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஜ்ராத் பகுதியில் உள்ள அலம்கிர் எனும் பகுதியில் அரங்கேறியுள்ளது.
விவாகரத்து கோரி கணவருக்கு தொல்லை
சித்ரா பஷிர் என்ற பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, சமூக வலைதளம் வாயிலாக பாபர் ஹுசைன் எனும் நபரை சந்தித்துள்ளார். அவர்களுக்கு இடையேயான பழக்கமானது நாளடைவில் திருமணத்தை மீறிய தாகத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி, தனது கணவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஆனாலும் கணவன் எதற்காக விவாகரத்து கோருகிறாய்? என்ன பிரச்னை? நமக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களை யார் பார்த்துக்கொள்வது என கேட்டு சண்டையிட்டுள்ளார்.
3 குழந்தைகளையும் கொன்ற கொடூரம்:
இதையடுத்து குழந்தைகள் இருக்கும் வரை காதலனை திருமணம் செய்ய முடியாது என முடிவு செய்து, அவருடன் சேர்ந்து 3 பேரையும் கொல்ல சித்ரா பஷிர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலனுடன் சேர்ந்து மூன்று குழந்தைகளுக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். பின்பு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு உடல்களை கொண்டு சென்று, யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக 3 உடல்களையும் எரித்து பின்பு அங்கேயே புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சிக்கியது எப்படி?
இதனிடையே, குழந்தைகளுடன் தனது மனைவியை காணவில்லை என சித்ரா பஷிரின் கணவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி மேற்கொண்ட விசாரணை மற்றும் தீவிர தேடுதல் பணியின் முடிவில், தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் காதலன் பாபர் ஹுசைனையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மூன்று குழந்தைகளையும் கொன்று எரித்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகள் உதவியுடன், வெறிச்சோடிய மலைப்பகுதியில் ஒரு இடத்தை தோண்டியதில், குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.





















