மேலும் அறிய

Shocking Video: படுக்கையில் ஏன் சிறுநீர் கழித்தாய்? வயதான தாயை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய மகன்...பகீர் வீடியோ!

படுக்கையில் சிறுநீர் கழித்த தாயை, அவரது மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாயை கொடூரமாக தாக்கிய மகன்:

பஞ்சாப் மாநிலம் ரோபர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா ராணி (73). இவரது கணவர் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு மகன், மகள் உள்ளார். எனவே, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இவரது மகன் அங்கூர் வர்மா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சுதா. இந்த தம்பதிக்கு சிறு வயதில் ஒரு மகன் உள்ளார். எனவே,  அங்கூர் வர்மாவின் தாய் ஆஷா ராணி  உடல் நிலை சரியில்லாமல் படுத்தப்படியே இருப்பார். இந்நிலையில், தான் தனது மகன், மருமகள் மற்றும் அவரது பேரனால் மூதாட்டி ஆஷா ராணி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   இந்த வீடியோ காட்சிகள் மூதாட்டி ஆஷா ராணியின் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. 

பதற வைக்கும் வீடியோ:

அந்த வீடியோவில், படுக்கையில் மூதாட்டி சிறுநீர் கழித்திருந்தார். இதனை பார்த்த அவரது பேரன், அவரது பெற்றோருடன் தெரிவிக்கிறார். இதனை அடுத்து, மூதாட்டியின் மகன் அங்கூர் வர்மா, அவரது தாயின் படுக்கையை தொட்டு பார்த்து ஆத்திரமடைந்தார். பின்னர், கழிவறையில் இருந்த மூதாட்டியை, அவரது மகன் தரதரவென இழுத்து வந்துள்ளார்.  பின்னர், அவரது படுக்கையில் போட்டு அவரை ஈவு இரக்கமின்றி அடித்திருக்கிறார். இதனை அங்கூர் வர்மாவின் மகன், மனைவி பார்த்துக் கொண்டு, மூதாட்டியை திட்டி கொண்டு இருக்கின்றனர். பின்னர், மூதாட்டியை, அவரது மகனான அங்கூர் வர்மா படுக்கையிலே அவரை சரமாரியாக அடித்துள்ளார்.

அவரது முதுகு, கன்னத்தில் இரக்கமின்றி அடித்திருக்கிறார்.  பின்னர், தலையிலும் அடித்துள்ளார். சிறுநீர் ஏன் கழித்தாய் என்று பலமுறை கேட்டு துன்புறுத்தியிருக்கிறார்.  மூதாட்டி தெரியாமல் செய்தேன் என்று கூறிய பின்னும், தொடர்ந்து தாக்கி கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், மூதாட்டியின் முடியை பிடித்து மனசாட்சியை இல்லாமல் கொடூரமாக அடித்துள்ளார். பின்னர், அவரது மனைவியும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மூதாட்டியை அவரது மகன் கொடூரமாக அடித்து விட்டு அவரை அதே படுக்கையில் படுக்க வைத்து சென்றுள்ளது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. 

வழக்குப்பதிவு:

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அவரது மகளிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் தீப்ஷிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில்  அங்கூர் ஷர்மா மற்றும் அவரது மனைவி மீது 24 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனை அடுத்து, அவரது வீட்டிற்கு சென்று, மூதாட்டி ஆஷா ராணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுக்கையில் சிறுநீர் கழித்த தாயை, அவரது மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!
"அரசு அதிகாரிக்கே இந்த நிலையா? மயிலாடுதுறையில் பெண் DRO-வுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!" 

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget