மேலும் அறிய

Crime: குளிர்பானத்தில் மயக்க மருந்து... பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: வசமாக சிக்கிய வாலிபர்!

பெண்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பெண்களை ஏமாற்றும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பல பெண்களை ஏமாற்றிய நபர் ஒருவரை காவல்துறையினர் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் ஜித்து (அ) அசோக் சுரவேஸ். இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பாக 23 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், “எனக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் என்னுடைய அந்தரங்க படத்தை எடுத்து அதை வைத்து என்னை மிரட்டி வந்தார். மேலும் எனக்கு திருமணம் என்று தெரிந்த பிறகு எனக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் இந்தப் படங்களை காட்டி திருமணத்தை நிறுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார். 

அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ஜித்து பல பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. அவர் பல பெண்களிடன் பழகி அவர்களை தனியாக அழைத்து சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பெண்களை நிர்வாணமாக படம் எடுத்து அதை வைத்து மீண்டும் அவர்களை தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. 

ஜித்து தன்னுடைய இடத்தை அடிக்கடி மாற்றி வந்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்தி வந்த மொபைல் எண்களையும் அடிக்கடி மாற்றி வந்துள்ளார். அவர் முதலில் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா சென்றுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அவர் கடைசியாக கோவாவில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை பிடிக்க கோவாவிற்கு புனே காவல்துறையினர் தனிப்படை அனுப்பி வைத்து கைது செய்தனர். கோவாவிலிருந்து அவரை தற்போது புனே அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். பல பெண்களை மோசடி செய்த நபரை காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிடித்தது தொடர்பாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க:வீட்டுக்கு போகவிடல.. மும்தாஜ் மீது பரபரப்பு புகார்! போலீசுக்கு போன் செய்த வட மாநில பணிப்பெண்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget