மேலும் அறிய

ஆன்லைன் டிரேடிங்கில் மோசடி...! புதுச்சேரி ஜிப்மர் ஊழியர் ரூ.2.49 கோடி இழப்பு!

புதுச்சேரியில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து ஜிப்மர் ஊழியர் ரூ. 2.49 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து ஜிப்மர் ஊழியர் ரூ. 2.49 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு - ரூ. 2.49 கோடியை மோசடி 

புதுச்சேரி, ஜி.என்.பாளையம், எழில் நகரை சேர்ந்தவர் சக்தி, 26; ஜிப்மர் ஒப்பந்த ஊழியர். இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியுள்ளார். அப்போது, யூடிப்பில் டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம், அதிக லாபம் தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்ளும்படி விளம்பரம் வந்துள்ளது.

இதை நம்பிய சக்தி, அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குரூப்பில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவித்து விட்டதாக நினைத்த சக்தி, மர்மநபர்கள் அனுப்பிய போலி ஆன்லைன் டிரேடிங் லிங்கில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று பல்வேறு தவணைகளாக ரூ. 2 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 357 முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு ரூ. 11 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 702 லாபம் வந்துள்ளது.

இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, GST கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சக்தி அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை 

புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

எங்கே, எப்படி புகார் அளிப்பது?

இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:  

  • தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
  • புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
  •  மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
  • இணைய தளம்: www.cybercrime.gov.in 

விழிப்புணர்வே பாதுகாப்பு

ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget