மேலும் அறிய

‛ரெய்டு’ டார்ச்சர் தாங்க முடியல... கையை கிழித்து, ஷாம்பு குடித்து தற்கொலை முயற்சி: சிறை கைதிகள் அட்டகாசம்!

காலாப்பட்டு மத்திய சிறையில் தொடர்ந்து செல்போன்கள் சிக்கிய நிலையில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக கூறி கடந்த 2 மாதத்தில் 16 கைதிகள் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உணவு தட்டுகளால் உடலை கிழித்து புதுவை சிறையில் கைதிகள் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அருகே காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 12ஆம் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

‛ரெய்டு’ டார்ச்சர் தாங்க முடியல... கையை கிழித்து, ஷாம்பு குடித்து தற்கொலை முயற்சி: சிறை கைதிகள் அட்டகாசம்!

இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

கடந்த 24ம் தேதி சிறை கைதிகள் 7 பேர் திடீரென தங்களின் உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே அவர்களை சிகிச்சைக்காக காலாப்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினர்.

‛ரெய்டு’ டார்ச்சர் தாங்க முடியல... கையை கிழித்து, ஷாம்பு குடித்து தற்கொலை முயற்சி: சிறை கைதிகள் அட்டகாசம்!

இதேபோல் விசாரணை கைதிகள் ஏழுமலை, ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற ரசாயன கரைசலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் மயங்கி விழுந்த அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டுது. இந்தநிலையில் 26ம் தேதி இரவு கைதிகள் சுகன் (28), பிரதீப் (26)   ஆகியோர் திடீரென இரும்பு ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து 2 பேரையும் அங்கிருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினர்.

நேற்று இரவு சிறை அறையிலிருந்த ஜமால், சத்யா உள்ளிட்ட 5 கைதிகள், தாங்கள் அடைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்ற கோரியுள்ளனர். ஆனால் அவர்கள் வேறு அறைக்கு மாற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர்கள் கூர்மையான சிறு பொருளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையறிந்த சிறைத்துறை போலீஸார் அவர்களை மீட்டனர். இதில் இருவரை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்ற 3 பேரை புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

 கடந்த 2 மாதத்தில் 16 கைதிகள் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Afganistan : தலிபான்களிடம் சிக்கிய ராணுவ Machine.. கலக்கத்தில் ஆப்கான்வாசிகள்

தலைப்பு செய்திகள்

போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget