மேலும் அறிய

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை காவல் நிலையதில் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு

புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடனும், இரண்டு குழந்தைகளுடனும் வசித்துவருகிறார் அந்த இளம் பெண். கணவர், தாழ்வு மனப்பான்மை காரணமாகத் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கணவன் அடிப்பதால் வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும் படியும் கூறியுள்ளார் .

இதையடுத்து வழக்கறிஞர் ஒருவருடன் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற அந்த பெண்ணின் கணவரை தனியாக அழைத்துப் பேசிய அதிகாரிகள், அவரை எச்சரிக்காமல், அந்தப் பெண் கொடுத்த புகாரை வாங்காமல், உன் கணவர் ரொம்ப நல்லவர். அவருடன்தான் நீ வாழ வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கின்றனர். அத்துடன் மேலும் தேவை என்றால் குடும்ப நல நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர்.

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

நியாயம் கிடைக்கும் என்று சென்ற இடத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் வீட்டுக்குத் திரும்பினார் அந்தப் பெண். அதன் பிறகு வழக்கமான அடி உதைகளுடன், சைக்கோத்தனமான செயல்களையும் அரங்கேற்றியிருக்கிறார் அந்த கணவர். இந்தநிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி காலையில் தன்னை மிருகத்தனமாக தாக்கியதால் வலியுடன் காவல்துறை அவசர உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு அழுதிருக்கிறார் அந்தப் பெண். அதையடுத்து லாஸ்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

உடனே லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறியிருக்கின்றனர். ஆனால் அங்கும் அந்தப் பெண்ணிடம் எந்தப் புகாரையும் வாங்காமல், இருவரிடமும் பேசி அனுப்பியிருக்கின்றனர். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் கணவர் அடித்ததால் மதியம் ஒரு மணிக்கு மீண்டும் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தப் பெண் நான் கொடுத்த புகாரை ஏன் நீங்கள் வாங்கவில்லை என கேட்டுள்ளார். என்னால் அவர் அடிப்பதைத் தாங்க முடியவில்லை. என் புகாரை வாங்குங்கள். நான் விவாகரத்து பெற வேண்டும் என்று அழுதிருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு சண்முகம், அந்தப் பெண்ணை அமர வைத்து விட்டு, அனைத்து காவலர்களையும் மதிய சாப்பாட்டுக்காகப் செல்லும் படி உத்தரவிட்டிருக்கிறார்.

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

அனைவரும் சென்றுவிட்ட பிறகு அந்தப் பெண் குறித்த அனைத்துத் தகவல்களையும் கேட்ட அந்த காவலர், `உன்னைப் பார்த்தால் ரெண்டு புள்ளைக்கு அம்மா மாதிரி தெரியலையே... நீ சிகப்பா இவ்ளோ அழகா இருக்கே. ஆனா உன் வீட்டுக்காரன் கருவாடு மாதிரி இருக்கான். அவன் கூட வாழ்ந்து நீ ஏன் கஷ்டப்படணும்? உனக்கு நான் வேலை வாங்கித் தருகிறேன். உன்னையும் உன் குழந்தைகளையும் நான் பார்த்துக்கறேன். நம்மகிட்ட நிறைய வக்கீல் இருக்காங்க. உனக்கு நானே டைவர்ஸ் வாங்கித் தர்றேன். இனிமே நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்  என்று கூறி திடீரென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்திருக்கிறார். அவர் கையை இழுத்துக்கொள்ள, உனக்கு ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு, அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று அந்தப் பெண் கூற, அதற்கென்ன நான் கற்றுக்கொடுக்கிறேன்’ என்று கூலாகக் கூறிவிட்டு, எந்த உதவியாக இருந்தாலும் தனக்குப் போன் செய்யும் படி தனது இரண்டு எண்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதற்கு மறுநாள் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீட்டிலிருந்த கதவை உடைத்து 13 பவுன் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார் அந்த கணவர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியபோதுதான், காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறி அழுதிருக்கிறார். அதையடுத்து அந்தப் பெண்ணை இறைவி பெண்கள் பாதுகாப்பு என்ற அமைப்பிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தக் காவலரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அந்த அமைப்பினர், அந்த காவலருக்கு போன் செய்யும்படி கூறி அந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

அந்த உரையாடலின் போது விவகாரத்துக்காக வழக்கறிஞருக்கு கொடுக்கத் தன்னிடம் பணம் இல்லையென்று கூறுகிறார் அந்தப் பெண். அதற்கு, அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். அப்புறமா வாங்கிக்கச் சொல்றேன். அவரை கவனிச்சு அனுப்பிடுறியா... இன்னைக்கு சாயந்தரம் பஸ் ஸ்டாண்டுகிட்ட இருக்கற அந்த வக்கீல் ஆபீஸுக்கு வா என்கிறார். தொடர்ந்து சார், அந்த ஆயில் மசாஜ் சொன்னீங்களே... அது எங்க சார்? என்று அந்தப் பெண் கேட்க, அந்த வக்கீல் ஆபீஸுக்கு வந்துடு என்கிறார். தொடர்ந்து எண்ணெய் நான் வாங்கி வரட்டுமா? என்று அந்தப் பெண் கேட்க, அதையெல்லாம் பார்த்துக்கலாம். சாயந்திரம் 5 மணிக்கு வந்துடு. நான் வெயிட் பண்றேன் என்று இணைப்பைத் துண்டிக்கிறார். மாலை 5 மணிக்கு பேருந்து நிலையத்தில் அந்த தலைமைக் காவலர் காத்திருக்க, இறைவி அமைப்பினருடன் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று தலைமைக் காவலர் மீது புகார் அளித்தார் அந்த இளம்பெண்.

இதனால் கோபமான காவலர் சண்முகம், அந்த பெண்ணிடம் புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் என்னை விபசார வழக்கில் கைது செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார். மேலும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஏட்டு சண்முகத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை ஆபாசமாகப் பேசியதுடன், என் நடத்தையைக் கேவலமாக விமர்சித்த தலைமைக் காவலர் சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் சண்முகம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவுகள் 354-A, 509 பிரிவுகளின் கீழ் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்ற புகாருடன் காவல் நிலையம் செல்லும் பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தரும் சேவையை புதுச்சேரி காவல்துறை எப்போது தொடங்கியது? என்று கேட்கும் லாஸ்பேட்டை பகுதி மக்கள், காவல் நிலையங்கள் அனைத்தும் முழுமையான சிசிடிவி கண்காணிப்புக்குள் வந்தால் மட்டுமே இப்படியான தவறுகளை தடுக்க முடியும் என்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget